tamilnadu

நிகிதா மீது துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை

நிகிதா மீது துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை 

உயர்கல்வித் துறை அமைச்சர் பேட்டி

திருநெல்வேலி, ஜூலை 5 - நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.  இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,  உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் ஆகியோர் வேலை நாடுநர்களுக்கான பணி நியமன ஆணை களை வழங்கினர்.  பின்னர் அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களி டம் கூறுகையில், “திருப்புவனம் இளைஞர் அஜித்குமார்  கொலையில் நகைத் திருட்டு புகார் கூறிய பேராசிரியை நிகிதா  மீது துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது” என்றார்.

விஜய்யை நாங்கள் கூப்பிடவே இல்லையே!  

அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டியில், “திமுக ஆட்சியை அகற்றுவேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறி  வருகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,  ஒவ்வொரு  கட்சிக்கும் பேசுவதற்கு உரிமை உண்டு. பல கட்சியினரும் ஆட்சிக்கு வருவேன் என்று கூறுவார்கள். ஆனால்  திமுக கூட்டணி தான் வலுவாக உள்ளது. மு.க.ஸ்டாலின்தான் மீண்டும் முத லமைச்சராக வருவார்” என்றார்.  தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திமுகவோடு எப்போதும் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “அவரை நாங்கள் கூப்பிடவே இல்லையே” என்று பதில் அளித்தார்.