இஸ்ரேல் தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட ஐ.நா. ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.நா அவையின் மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2023 அக்டோபர் முதல் காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலில் சுமார் 300 க்கும் மேற்பட்ட ஐ.நா ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளையால் நடத்தப்படும் குழப்பமான, ராணுவமயமாக்கப்பட்ட விநியோக மையங்கள் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது
எனவும் , மே மாத இறுதியில் இருந்து உணவு பெற முயன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.