tamilnadu

img

கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைகளும் செல்லும்

கைவிரல் ரேகை பதிவு செய்யாத  குடும்ப அட்டைகளும் செல்லும்

தமிழக அரசு விளக்கம்

தமிழக அரசு விளக்கம் சென்னை, ஜூலை 5 - கைவிரல் ரேகை பதியாத குடும்ப அட்டைகள் செல்லாது என்று சமூக வலை தளங்களில் பரவும் தகவல் வதந்தி என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் குடும்ப அட்டைக்கு உரிய பொருட்கள் முழு  எடையும் பெறும் வகையில், நியாய விலைக்  கடை, எடை இயந்திரத்துடன் விற்பனை முனைய இயந்திரத்தினை இணைத்து பட்டிய லிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் விற்பனை  முனைய இயந்திரத்தில் விரல் ரேகை மூலம் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய  வேண்டும். கைரேகை பதிவு செய்யாத வர்கள் ஒன்றிய அரசால் வழங்கப்படும் மானிய பொருட்கள் பெற இயலாது. எனவே,  ஜூன் 30-ஆம் தேதிக்குள் அந்தந்த நியாய விலைக் கடைகளை அணுகி விரல் ரேகை  அல்லது கருவிழி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். வீட்டில் முதியவர்கள்,  நோயாளிகள் இருந்தால் விற்பனையாள ருக்கு தகவல் அளித்து வீட்டில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், விரல் ரேகை பதிவு செய்யாத வர்களின் குடும்ப அட்டைகள் செல்லாததாக  மாறிவிடும் என்று வரும் தகவல்கள் உண்மை யில்லை என்று தமிழக அரசின் அதிகாரப்பூர்வ  சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம்  விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, கடைசி தேதி இன்னமும் வரையறுக்கப்படவில்லை. எனவே, சமூக ஊடகங்கள் மூலம் வரும் செய்தி  உண்மை இல்லை என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் கொடுத்து உள்ளது.