காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
ஒன்றிய கல்வி அமைசர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு எம்.பி.,க்கள் குறித்து பேசியது நாட்டின் ஒரு பகுதி மக்களின் சுயமரியாதையை புண்படுத்தியதாக உள்ளது. நாகரிகமற்றவர்கள், பண்பாடற்றவர்கள் என்று பேசியதற்காக தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும்.
திமுக எம்.பி., கனிமொழி சோமு
தமிழ்நாடு ஒருபோதும் புதிய கல்விக் கொள்கையை ஏற்பதாகக் கூறவில்லை. பிஎம் ஸ்ரீ பள்ளிகளை ஏற்பதாக தமிழ்நாடு அரசு கூறியதாக ஒன்றிய அமைச்சர் கூறியது தவறானது. தமிழ்நாட்டின் மொழி உரிமைக்கு எதிராக, கூட்டாட்சிக்கு எதிராக ஒன்றிய அரசின் செயல்பாடு உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது கருத்துக்களுக்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். அவர் பயன்படுத்திய மொழி எதிர்பாராதது. இதுபோன்ற மொழியைப் பயன்படுத்தியதன் மூலம் ஒரு மாநில மக்களையே அவர் அவமதித்துள்ளார். ஒன்று அவர் நாடாளுமன்ற அவையில் மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி
ஒரு இளைஞர் எப்படி 17 மாதங்களில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நியமனப் பத்திரங்களை வழங்கினார்? என்பதை பீகார் முதலமைச்சராக இருக்கும் நிதிஷ் குமார் மனதளவில் நேர்மையாகச் சிந்தித்தால், நிச்சயமாக எனது திறமையைப் பாராட்டுவார்.