tamilnadu

ஓராண்டுக்குள் 17,702 பேர் அரசுப் பணியில் நியமனம்! டிஎன்பிஎஸ்சி செயலாளர் தகவல்

ஓராண்டுக்குள் 17,702 பேர் அரசுப் பணியில் நியமனம்! டிஎன்பிஎஸ்சி செயலாளர் தகவல்

சென்னை, ஜூலை 5 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அரசுத் துறையில்  உள்ள காலிப்பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு மூலம் நிரப்பப்பட்டு  வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம், ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 பேருக்கு அரசு வேலை  வழங்கி சாதனை படைத்துள்ளதாக அதன் செயலாளர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பணியை எதிர் நோக்கி இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை  ஏற்படுத்தும் விதமாக, டி.என்.பி.எஸ்.சி. மூலம் 17,595  காலிப்பணியிடங்கள் 2026 ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. தேர்வர்களின் நலன் கருதி, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுப்  பணிகளை துரிதப்படுத்த, கடந்த 2024 ஜூன் முதல் நடப் பாண்டு ஜூன் மாதம் வரையில் பல்வேறு அரசுத் துறைகள்  மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியி டங்களை நிரப்ப 17 ஆயிரத்து 702 இளைஞர்கள் தேர்வு  செய்யப்பட்டுள்ளனர். 2026 ஜனவரி மாதம் வரை நிர்ணயித்த  இலக்கை டி.என்.பி.எஸ்.சி. 7 மாதங்களுக்கு முன்பாகவே எட்டியுள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு கூடுதலாக 2,500-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.