states

img

கன்னட மொழி குறித்து பேச நடிகர் கமலுக்கு தடை

கன்னட மொழி குறித்து பேச நடிகர் கமலுக்கு தடை  

இயக்குனர் மணிரத்னம் இயக்கத் ்தில் நடிகரும், மக்கள் நீதி மய் யத்தின் தலைவருமான கமல் ஹாசன் நடித்துள்ள‌ “தக் லைப்” திரைப் படத்தின் இசை வெளியீட்டு விழா வில்,”தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்” எனக் கூறினார். கமல்ஹாச னின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி யது. தனது கருத்திற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டார். ஆனால் அவர் மன்னிப்புக் கேட்க மறுத்து விட, “தக் லைப்” திரைப்படத்தை வெளி யிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது.  இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாக பிர சன்னா,”நடிகர் கமல்ஹாசன் என்ன மொழியியல் நிபுணரா? மன்னிப்புக் கேட்பதில் என்ன தயக்கம்?” என கேள்வி எழுப்பினார். ஆனாலும் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்கவில்லை. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விசாரணைக்கு பின்னர் உச்சநீதிமன்றம்,”ஒருவரின் கருத்தில் தவறு இருக்கிறது என்றால், விவாதம் நடக்கட்டும். அவர் கூறியது தவறு என்று மக்கள் சொல்லட்டும். ஆனால் உயர்நீதி மன்றம் கருத்திற்காக கமல்ஹாசனை மன்னிப்புக் கேட்க ஏன் கோர வேண்டும்? அது நீதிமன்றங்களின் வேலை அல்ல” என்று காட்டமாக உத்தரவிட்டது. இந்நிலையில், கன்னட மொழியின் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வரும் “கன்னட சாகித்ய பரிஷத்” என்ற அமை ப்பு, பெங்களூரு நகர சிவில் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. எதிர்த் தரப்பினரின் வாதங்களைக் கேட்காமலேயே பிறப்பிக்கப்பட்ட இந்தத் தடை உத்தரவில்,”கன்னட மொழியை விடத் தங்கள் மொழி உயர்ந்தது என்றோ அல்லது கன்னட மொழி, இலக்கியம், கலாச்சாரத்தைப் புண்படுத்தும் வகை யிலோ அல்லது அவதூறு செய்யும் வகை யிலேயோ கமல்ஹாசன் எந்தவிதமான அறிக்கைகளையோ, கருத்துக்களையோ வெளியிடவோ, எழுதவோ, பதிவிடவோ கூடாது. இந்தத் தடையானது வழக்கின் அடுத்தகட்ட விசாரணையான ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும்” என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.