headlines

img

12 மணிநேரம் வேலை சுரண்டலுக்கே வழிவகுக்கும்

12 மணிநேரம் வேலை  சுரண்டலுக்கே வழிவகுக்கும் 

குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகள் சட்டம் 1948இன் முக்கிய விதிகளில் திருத்தம்  செய்யப்பட்டு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் தினசரி வேலை நேரம் 9 மணி யிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  சில நிபந்தனைகளின் கீழ் பெண்களை இரவு நேரப் பணிகளில் பணிய மர்த்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கவும், புதிய திட்டங்களுக்கான முத லீட்டை ஈர்க்கவும், வேலைவாய்ப்பை உருவாக்க வும் தொழிற்சாலைகளுக்கு தளர்வு அளிக்க இந்த சட்டத் திருத்தம் அவசியம் என்று அம்மாநில பாஜக அரசு கூறியுள்ளது. இதேபோன்ற கருத்தை தான் பல மாநில அரசுகளும் கூறுகின்றன. 

ஐரோப்பிய நாடுகளில் 8 மணி நேர வேலை க்குப் பதிலாக ஆறு மணி நேர வேலை என்பதை அமல்படுத்த வேண்டும்; அப்போதுதான் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என விவாதித்து வருகிறார் கள். ஆனால், இந்தியாவில் பல மாநிலங்களில் நாம் பின்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.  4 நாட்கள் 12 மணி நேரம் வேலை பார்த்துவிட்டு, 3 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறினாலும், அப்படி நடக்க எந்தத் தொழிற்சாலையும் அனுமதிக்காது. 

ஒன்றிய அரசு முதலில் இதுபோல சட் டத்தைத் திருத்தியபோது சிஐடியு, ஏஐடியுசி உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்த்த தால், மாநிலங்களின் பொறுப்பில் இதனை விட்டு விட்டது. 2020இல் உத்தரப்பிரதேசத்தில் இதுபோல சட்டம் திருத்தப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து  வழக்குத் தொடரப்பட்டது. பின்னர் அம்மாநில அரசே அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றது. தமிழக சட்டப்பேரவையிலும்  இதுபோன்ற சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அரசு பின்னர்  கைவிட்டது. 

கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் இதே போல தொழிலாளர் நலச் சட்டம் திருத்தப் பட்டது. அப்போது இரண்டு செல்போன் தயாரிக் கும் நிறுவனங்களுக்காகவே சட்டம் திருத் தப்பட்டதாக அம்மாநில அரசு வெளிப்படையா கச் சொன்னது.  ஆனால், இதுபோல ஒரு திருத்தத் தைக் கொண்டுவருவதற்கு முன்பாக, தொழிற் சங்கங்களுடன் எந்த அரசும்  பேசுவதில்லை. தொழிலாளர்களுடன் எதுவும் பேசாமல், தொழிற் சாலைகள் சொல்கின்றன என்பதற்காக எப்படி இப்படி ஒரு திருத்தத்தைக் கொண்டு வருகிறார் கள்?  

வேலை நேரத்தை அரசு ஒழுங்குபடுத்த வேண்டிய காலம் உருவாகிவரும் நிலையில், இப்படி வேலை நேரத்தை அதிகரிப்பது உற் பத்தியை, வேலைத் திறனைக் கடுமையாகப் பாதிக்கும் “வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட் டிற்காக இந்தியாவை நோக்கி வருகின்றன. அதை பாதுகாப்பதற்காக தொழிலாளர்களின் நலனை பலி கொடுப்பது எந்த வகையிலும் நியாய மல்ல. நெகிழ்வுத் தன்மை என்பது தொழிலா ளியை ஒட்டச் சுரண்டவும், முதலாளிகளுக்கு உறிஞ்சிக் கொடுக்கவுமே வழிவகுக்கும். தொழில் நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் வேலை நேரம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும்.