headlines

img

மீண்டும் மீண்டும் டிரம்ப்: வாய் திறப்பாரா மோடி?

மீண்டும் மீண்டும் டிரம்ப்: வாய் திறப்பாரா மோடி?

இங்கிலாந்து சென்றிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மீண்டும் ஒருமுறை இந்தியா- பாகிஸ்தான் போரை தான் தான் நிறுத்தியதா கக் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, நான் இல்லாதி ருந்தால் இப்போது பெரிய போர்கள் நடந்து கொண்டிருக்கும். இந்தியா பாகிஸ்தானுடன் சண்டையிட்டிருக்கும். இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் போரை நிறுத்தியது பெரிய விஷயம் என்று லண்டனில் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.

இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறியிருப்பது இதோடு 27 ஆவது முறையாகும். ஆனால் பிரதமர் மோடியோ இதுபற்றி வாயைத் திறப்பதேயில்லை. டிரம்ப் எனது நண்பர் என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி இதற்கு மறுப்புத் தெரிவிக்காமல் இருப்பதன் மர்மம் என்ன?

நாடாளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி,  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கோ, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரோ இதுபற்றி எதுவும் கூறுவதில்லை. ராஜ்நாத் சிங்கோ, இந்திய ராணுவத்தின் தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக் கொண்டது என்று நாடாளுமன்றத்தில் கூறி னார். ஜெய்சங்கரோ, ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை பிரதமர் மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும் எந்த வகையிலும் பேசவில்லை என்கிறார்.

ஆனால் அதன்பிறகு தான் செவ்வாயன்று லண்டனில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்ம ருடன் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் நான்  தான் போரை நிறுத்தினேன் என்கிறார். இப்போதா வது பிரதமர் மோடி வாய் திறப்பாரா? டிரம்ப்புக்கு மறுப்பு சொல்வாரா? நாடே எதிர்பார்க்கிறது. நடக்குமா?

நாங்கள் 6 பேர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம் என்றும் ஒருவரை ஒருவர் கொல்லும் நாடுகளுடன் நாங்கள் வர்த்தகம் செய்ய விரும்பவில்லை; எனவே வர்த்தகம் மூல மாக போரை நிறுத்தியுள்ளோம் என்று டிரம்ப் கூறி யுள்ளார். தாய்லாந்து - கம்போடியா  போர் நிறுத்தம் மலேசிய பிரதமர் அன்வர் முன்னெடுப்பில் சீன, அமெரிக்க தூதர்கள் பங்கேற்புடன் நடந்த பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் டிரம்ப் தானே சாதித்ததாக தம்பட்டம் அடிக்கிறார்.

ஒருவரை ஒருவர் கொல்லும் நாடுகளுடன் வர்த்தகம் செய்ய மாட்டோம் என்று கூறும் டிரம்ப் பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை கொன்று குவிக்கும் இஸ்ரேலுடன் வர்த்தகம் செய்வதற்குப் பெயர் என்ன? மரண வியாபாரமா? ஆயுத வியாபாரி அமெரிக்கா அமைதியின் - சமாதானத்தின் தலைவர் என்று கூறுவது நகைப்புக்குரியது.

இந்தியாவை உலகமே எதிர்பார்க்கிறது என்று கூறும் மோடி, தன்னை விஸ்வகுரு என்று கூறிக் கொள்ளும் மோடி, மவுன குருவாக இருப்பதிலி ருந்து மாறி வாய் திறக்கட்டும். டிரம்ப்புக்கு பதில் கொடுக்கட்டும்.