கடலூர்
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் இஸ்லாமியர்கள் கண்டனகோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாகசென்று பண்ருட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தவ்ஹீத் ஜமாத்சார்பில் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். காவல்துறையை கண்டித்து இரண்டாவது நாளாக மாநிலத்தின் பல்வேறு பகுதியிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. வட சென்னைமாவட்டத்தில் மண்ணடி, வண்ணாரப்பேட்டை, மின்ட் உள்ளிட்ட பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டி.கே. ரங்கராஜன் எச்சரிக்கை
காவல்துறை தடியடி நடத்தியவண்ணாரப்பேட்டை லாலாகுண்டாபகுதியில் சனிக்கிழமையன்று (பிப்.15)நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு தலைவர் கே.எஸ். அழகிரி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.டி.கே. ரங்கராஜன் தமது கண்டனஉரையில், “நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் வழிகாட்டுதலோடு முஸ்லீம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடினர். இந்தபோராட்டத்தில் பங்கெடுக்காத அரசியல் கட்சிதான் மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது” என்றார்.மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லீம் மக்களை மட்டுடிதன்றி பெரும்பான்மை இந்துமக்களையும் பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை செய்தார்.ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் இந்து-முஸ்லீம்களை பிரிப்பது தான். இதனை எதிர்த்து போராடும் வேலையைத்தான் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், திமுக,விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்துசெய்து வருகிறது என்றும் ரங்கராஜன்தெரிவித்தார்.