புதுதில்லி:
பயங்கரம்!கொடூரம்!பரிதாபம்! இது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தவறிய தில்லி மாநில ஆட்சி நிர்வாகம் பற்றி உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட வார்த்தைகள். கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதிலும், அவர்களைத் தனிமைப்படுத்துவதிலும், உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதிலும் தில்லி மாநில அரசின் படுமோசமான செயல்பாடுகளால் தில்லியில் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளது.
அரசு மருத்துவமனை ஊழியருக்கு நேர்ந்த அவலம்
அரசின் முக்கியமான மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் சரிகா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகிறது. தன்னிடம் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ் எண்களுக்கும் தொலைபேசியில் பேசி அழைக்கிறார்.யாரும் வரவில்லை. கடைசியில் அவரது நண்பர்மழைக்கோட்டு, கையில் உறை, ஹெல்மட் உடன் இரு சக்கர வாகனத்தில் வந்து சரிகா பணிபுரியும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். கோவில் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப் பட்ட சுத்திகரிப்பு செய்யப்படாத மருத்துவ உபகரணங்கள் மூலம்பரிசோதிக்கப்படுகிறார். காய்ச்ச லும், ரத்த அழுத்தமும் அதிகரிக் கிறது. ஆனாலும் அவர் பணிபுரியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வில்லை.பல மணிநேரம் கழித்து, இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு நள்ளிரவில் ஆம்புலன்சில் அனுப்பப்படுகிறார். அந்த ஆம்புலன்சில் ஆறு பேர் இருக்கிறார்கள். ஒருவர்இடைவிடாமல் வாந்தி எடுத்துக் கொண்டே இருக்கிறார். தனிமைப் படுத்தல் முகாமில் இருந்து தொற்று மறுபரிசோதனை செய்யப்படாமலே சிலநாட்களுக்குள்ளாகவே வீட்டுக்கு போய் தனிமைப் படுத்தி கொள்ளுமாறு டிஸ்சார்ஜ் செய்யப் படுகிறார். தனக்கென தனிக் கழிப்பறை கொண்டவீடு இல்லை என்பதால், மனிதாபி மானம் கொண்ட தனது நண்பரின் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொள்கிறார்.
தொற்றில் இருந்து குணமான மறுநாளே மீண்டும் பணியில் சேர வற்புறுத்தப்படுகிறார். கடுமையான மன உளைச்சலால் விடுமுறையில் செல்கிறார். மோடி யாருக்கு நன்றி தெரிவிக்குமாறு கைதட்டச் சொன்னாரோ - அத்தகைய முன்கள மருத்துவப் பணியாளர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களின் கதி என்ன?கொரோனா சிகிச்சைக்கான லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன்மருத்துவமனைக்கு பத்து நிமிடங்களுக்கொருமுறை, ஆம்புலன்சுகள் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களைக் கொண்டு வந்த வண்ணம் உள்ளன. ஆனால், ஆறு நாட்களுக்கு முன்பு தொற்றால் பாதிக்கப்பட்ட தனது தந்தை எப்படி இருக்கிறார், என்ன ஆனார் என்று தெரியாமல் ஒருவர் பரிதவித்துக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட காட்சிகள் நிறைந்து கிடக்கையில், யார் யாருக்கு ஆறுதல் சொல்வது எனத் தெரியாமல் பரிதவித்து நிற்கிறார்கள் மக்கள்.
பரிசோதனையை அதிகரிக்காமல்...
செயலூக்கமிக்க திட்டத்தை வகுக்காமல் பெருகி வரும் தொற்றுப்பரவலை தில்லியால் கட்டுப்படுத்த முடியாது. ஒரு நாளில் 22000 பேருக்கு ஆண்டிஜென் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்பதுஇலக்கு. ஆனால், தினமும் இதில்,50 சதவீதமே சோதனைகள் நடத்தப்பட்டன. கடுமையான விமர்சனங் களுக்குப் பின்னர், 33,40,538 வீடுகளிலும், சராசரியாக வீட்டுக்கு ஐந்து பேர் என்ற விகிதத்தில் பரிசோதனை;263 கட்டுப்பாட்டு மண்டலங்களில் ரத்த சீரம் பரிசோதனை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தல் முகாமில் பாதிக்கப்பட்டவர்களை எத்தனை நாட்கள் வைத்திருக்க வேண்டும் என்பது தொடர்பாக தில்லி லெப்டி
னன்ட் கவர்னர் பைஜால் தன்னிச்சையாக பிறப்பித்த உத்தரவை எதிர்த்துமுதல்வர் கெஜ்ரிவாலும் அமைச்சர் களும் வெகுண்டெழுந்தனர். பின்னர் கவர்னரின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
போதுமான திட்டமிடல் இல்லாத அரசு மருத்துவமனைகள்
தொற்று நோய் பேரிடர் ஆரம்பித்தஉடனேயே அரசு மருத்துவமனைகள் போதுமான ஏற்பாடுகளுடன் தயாராகஇருப்பதாக கெஜ்ரிவால் தெரி வித்தார். ஆனாலும், மாநில பொது சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போது அவர்அரசு மருத்துவமனையை நாடவில்லை. ராஜீவ் காந்தி ஸ்பெசாலிட்டிமருத்துவ மனையில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கான அனுமதிஇல்லாததால் அவர் தனியார் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மேலும், அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டறியப்பட்ட தற்கு ஒரு நாள் முன்பு தில்லி முதல்வர்,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், தில்லி மாநில அமைச்சர்கள்- அதிகாரிகள், லெப்டினன்ட் கவர்னர், மாநிலப் பேரிடர் ஆணைய அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட கூட்டத்தில் சத்தியேந்திர ஜெயினும் கலந்துகொண்டார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி, இவர்கள் அனைவரும் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டார்களா என்பது பற்றிய தகவல் ஏதுமில்லை. தில்லி மாநில அரசின் தொற்று நோய் எதிர்ப்பு நடவடிக்கைகள் இது போன்றுதான் பல்வேறு ஓட்டைகளுடன் உள்ளன.
பிரண்ட்லைன் (ஜீலை 7,2020) ஏட்டில் திவ்யா திரிவேதி எழுதியுள்ள கட்டுரையிலிருந்து
தொகுப்பு : ம.கதிரேசன்