tamilnadu

img

தமிழகத்தில் நவ.5 ஆம் தேதிமுதல் பள்ளிகளிலேயே தடுப்பூசிகள் செலுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவு  

தமிழகத்தில் நவ.5 ஆம் தேதிமுதல் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே தடுப்பூசிகள் செலுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.  

சென்னை – தமிழகத்தில் நவ.5 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டனர். இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தற்போது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்புகளும் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,  அதனை தொடர்ந்து நவ.5 ஆம் தேதிமுதல் பள்ளி வளாகங்களிலேயே 5 முதல் 6 வயது வரை உள்ள மாணவர்களுக்கு டிபிடி எனப்படும் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி தடுப்பூசியை வழங்க வேண்டும்.

10 வயதான மாணவர்களுக்கு ரணஜன்னி தடுப்பூசி வழங்க வேண்டும்.  இந்த நடவடிக்கையை டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்வது அவசியம், பள்ளியில் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.