tamilnadu

img

செங்கல்பட்டு தடுப்பு மருந்து பூங்காவை செயல்படுத்தும் முதல்வரின் முயற்சிக்கு பாராட்டு....

சென்னை:
நோய்த்தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிலையங்களை கோவிட்-19 தடுப்பூசி தயாரிக்க செயல்பாட்டிற்கு கொண்டுவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு இயக்கம் பாராட்டுக்கள் மற்றும் நன்றியை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் மரு.ரெக்ஸ் சற்குணம், செயலாளர் ந.ஞானகுரு ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள நன்றி அறிவிப்பு கடிதம் வருமாறு: 

தமிழக முதல்வர் செங்கல்பட்டு நோய்த்தடுப்பு மருந்து உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டு,அங்கு தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்ய எடுக்கப்படும் முயற்சிக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு இயக்கம் தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் பொருத்தமற்ற காரணங்களைச் சொல்லி, கிண்டியில் உள்ள நோய்த்தடுப்பு மருந்து உற்பத்தி நிலையம், குன்னூரில் உள்ள பாஸ்டியர் நிறுவனம்,கசோலியில் உள்ள நோய்த்தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிலையங்களை மூடிவிட்டு செங்கல்பட்டு அருகே தனக்குவேண்டியவருக்கும் உறவின ருக்கும் உதவ  தனியார் பங்களி ப்புடன் மருத்துவப் பூங்காவைத் துவக்க முடிவெடுத்தார்.

இதனை எதிர்த்து மக்கள்நல்வாழ்வு இயக்கம் விடாப்பிடி யாக போராடி மீண்டும் செயல்பட அன்றைய மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் , பிருந்தா காரத்,டி.கே.ரங்கராஜன்( சிபிஎம்) நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வர்களின் சீரிய முயற்சியும் அவை செயல்பட முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் செங்கல்பட்டு தடுப்பு மருந்து பூங்காவிற்கு 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கட்டமைக்கப்பட்டது.இதனை செயல்பாட்டிற்கு கொண்டுவர  தமிழகத்தில் உள்ள அறிவியலாளர்கள், மருத்துவர்கள், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு இயக்கம் ஆகிய வற்றின் வேண்டுகோளை ஏற்று செங்கல்பட்டு தடுப்பு மருந்து பூங்காவை பார்வையிட்டு அதனை செயல்பாட்டிற்கு கொண்டுவர தங்களின் முயற்சிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் மீண்டும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.