கண்ணூர்:
கேரளத்தில் கோவிட் பரவல் அதிகரித்ததை அடுத்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அவசர கூட்டம் வியாழனன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், மாநிலத்தில் முகக் கவச பரிசோதனை நடத்துதல், கட்டுப்பாடுகள் போன்ற பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் உள்ளூர் நீதிபதிகள் தலைமையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டியது குறித்து விவாதிக்கப்பட்டது. தினசரி கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் சோதனை நேர்மறை விகிதங்கள் பெருமளவில் அதிகரித்ததை அடுத்து முதல்வர் இந்த அவசரக் கூட்டத்தை நடத்தினார்.