states

img

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்!

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் (81) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோச்சா (JMM) கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் இன்று (4 ஆகஸ்ட் 2025, திங்கள்) காலை 8:56 மணிக்கு தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். 
மேலும், சிபு சோரன் கடந்த சில மாதங்களாகச் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக ஜார்க்கண்ட் முதலமைச்சரும் அவருடைய மகனுமான ஹேமந்த் சோரன் மறைவை உறுதிப்படுத்தியுள்ளார்.
வரலாற்றில் முக்கியமான பழங்குடி தலைவராகவும், ஜார்க்கண்ட் மாநிலம் உருவாகக் காரணமான முக்கிய தலைவர்களுள் ஒருவராகவும், மூன்று முறை மாநில முதல்வராகவும் இருந்தவர் சிபு சோரன். அவரது மறைவு மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பு என்று பல்வேறு முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.