tamilnadu

img

குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் மாநகராட்சி!

குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் மாநகராட்சி!

சேலம், மார்ச் 4- குடிநீர் விநியோகத்தை தனி யாருக்கு தாரைவார்க்கும் சேலம்  மாநகராட்சி நிர்வாகத்தை கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 14 லட்சம் மக்கள் வசித்து  வரும் சூழ்நிலையில், அன்றாடம்  சுமார் 2 லட்சம் மக்கள் பல்வேறு  பணிகளுக்காக வந்து செல்வதும் உண்டு. ஏறத்தாழ 15 லட்சம் மக்கள்  நாள்தோறும் சேலம் மாநகரில் குடி நீரை பயன்படுத்தி வருகின்றனர். மாநகரத்தில் 3500 தெருக்களில் 1.25 லட்சம் குடிநீர் இணைப்புகளும், 846 கிலோமீட்டர் குடிநீர் பகிர் மான குழாய்களும் உள்ளது. 57  நீர்த்தேக்க மேல்நிலைத் தொட்டி கள் அமைக்கப்பட்டு, குடிநீர் வழங் கப்பட்டு வருகிறது. இந்த கட்ட மைப்பின் தற்போதைய மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய் ஆகும்.  இந்நிலையில், இரண்டு நாட்க ளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோ கம் செய்வது சம்பந்தமாக, சூரமங் கலம் மண்டலக்குழு தலைவர் தலை மையில் பொறியாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட 24 பேர் கொண்ட ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இரண்டு மாதங்கள் ஆய்வு செய்து  குடிநீர் விநியோகத்தை தனியா ருக்கு வழங்கத் தேவையில்லை என்றும், நூறு கோடி ரூபாய் செல வழித்து தேவையான உபகரணங் கள் வாங்கி சில பராமரிப்பு பணிகள்  செய்தால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யலாம் என அறிக்கை சமர்ப் பித்திருந்தனர். தற்போது, சேலம் மாநகராட்சி யில் 20 ஆண்டுகள் குடிநீர் விநியோ கம் செய்ய மக்கள் வரிப்பணத்தில்  உருவாக்கிய மொத்த கட்டமைப் பையும் தனியாருக்கு மாநகராட்சி நிர்வாகம் வழங்க உள்ளது. இந்த முடிவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதனன்று  சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி யின் மேற்கு மாநகரச் செயலாளர்  பி.கணேசன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எம்.கனகராஜ், என்.பிரவீன்  குமார், மாவட்டக்குழு உறுப்பினர் கள் பி.பாலகிருஷ்ணன், வி.வெங்க டேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.