கோனியம்மன் கோவில் திருவிழாவில் மத நல்லிணக்கம்!
கோவை, மார்ச் 4- கோனியம்மன் கோவில் திருவிழா வில், பக்தர்களுக்கு வாலிபர் சங்கம் மற் றும் இஸ்லாமியர்கள் தண்ணீர் வழங் கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா புதனன்று நடைபெற் றது. இத்தேரானது ராஜவீதி, ஒப் பணக்கார வீதி, கடைவீதி உள் ளிட்ட சாலைகளில் பவனி வந்தது. இத் திருவிழாவை முன்னிட்டு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில், அங்கு வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்க ளுக்கு உணவு, ரோஸ் மில்க் மற்றும் குடிநீர் வழங்கினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ்ராஜா, மேற்கு நகரப் பொறுப்பாளர் ரத்தீஷ், நகர உறுப்பினர்கள் இளங்கோ, அனிருத், சிபிஎம் கமிட்டி செயலாளர் முருகன், கமிட்டி உறுப்பினர்கள் பர மேஸ்வரன், மருதன் முத்துக்குமார், சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதேபோல ஒப்பணகாரர் வீதியில் தேர் வந்த போது, அங்கிருந்த அத்தர் ஜமாத் மசூதியை சேர்ந்த இஸ்லாமியர் கள், தீச்சட்டி எந்தியும், கரகம் எடுத்தும் வந்த பக்தர்களுக்கு தண்ணீர், குளிர் பானம் வழங்கினர். அதில் கரகம் வைத் திருந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர் களே தண்ணீர் குடிக்க வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
