மேம்பாலத்திலிருந்து கீழே குதித்த காளை!
நாமக்கல், மார்ச் 4- வாராந்திர மாட்டுச்சந்தைக்கு வந்த காளை ஒன்று, தறிக் கெட்டு சாலை முழுவதும் ஓடி, மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் வியாழ னன்று மாட்டுச் சந்தை கூடுவது வழக்கம். இந்நிலையில், இந்த மாட்டுச்சந்தைக்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து புத னன்று ஏராளமான மாட்டு வியாபாரிகளும், விவசாயிகளும் வருகை தந்தனர். இந்நிலையில், வெளி மாவட்டம் ஒன்றிலி ருந்து விற்பனை செய்வதற்காக வியாபாரி ஒருவர் காளை மாட்டை, தனது சரக்கு ஆட்டோவில் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு கொண்டு வந்தார். அப்பொழுது மாட்டை இறக்கி விடும் பொழுது பயத்தில் மிரண்டு போன காளைமாடு ஒன்று தலை தெறிக்க அங்கிருந்து ஓடியபடியே பள்ளிபாளை யம் காவிரி ஆற்று பாலம், பள்ளிபாளையம் மேம்பாலம் வரை ஓடிக்கொண்டே வந்தது. தொடர்ந்து, பள்ளிபாளையம் மேம் பாலத்தின் மேலே, வழி தெரியாமல் திடீரென சுமார் 15 அடி உயரத்திலிருந்து கீழே நடுசாலையில் குதித்தது. இதில் மூக்கு உள்ளிட்ட இடங்களில் ரத்தம் வழிந்த நிலையில், அங்கிருந்த வர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் விரைவாக வந்து அந்த மாட்டை மீட்டு, சரக்கு ஆட்டோவில் ஏற்றி மாட்டுச் சந்தைக்கு கொண்டு சென்றனர்.
