விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் நாசா ஆய்வாளர்களும் இணைந்துள்ளனர். சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த சனிக்கிழமை அதிகாலையில் நிலவின் தென்துருவப்பகுதியில் திட்டமிட்டிருந்தபடி மெல்ல மெல்ல தரை இறங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.