அகிலத்துக்கு வழிகாட்டிய அச்சகத் தொழிலாளி
ஆறு மாதம் இருட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட50 வயது மதிக்கத்தக்க அந்த நபரை, ஹிட்லர் ஆட்சி செய்த ஜெர்மனியின் லீப்சிக் நீதிமன்றத்தில், 82 வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களும், 42 ஜெர்மன் நாட்டுப் பத்திரிகையாளர்களும் அங்கே அமர்ந்திருக்க அவரை கொண்டு வந்து நிறுத்துகிறது ஜெர்மன் போலீஸ், ஜெர்மனியின் நாடாளுமன்றமான ரிச்ஸ் டாக்கை தீயிட்டுக் கொளுத்துவதற்கு காரணமாக இருந்தார் என்பதுதான் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. இது நடந்தது 1933 செப்டம்பர் 25.நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த நபரைப் பார்த்து லீப்சிக் நீதிமன்ற தலைவர் “ ரிச்ஸ் டாக்கை (நாடாளுமன்றத்தை) தீயிட்டுக் கொளுத்த காரணமாக இருந்தாய், என்பதற்கு - நீ - என்ன சொல்கிறாய் “ என்று கேட்கிறார்.நீதிபதியை ஏறிட்டுப் பார்த்த அந்த குற்றச்சாட்டப்பட்ட நபர் தனது பதிலை இப்படி சொல்கிறார். 1882ஜூன் 18இல்சோபியா அருகேயுள்ள ராதோ மிரில் பிறந்தேன். ஆறாம் வகுப்பில் பள்ளியை விட்டு வெளியேறி 1904 ஆம் ஆண்டு வரை அச்சுக் கோர்ப்பவ ராகப் பணியாற்றினேன். தொழிலாளி வர்க்க இயக்க வீரர்களுக்கிடையே வளர்க்கப்பட்டேன்.15 ஆம் வயதிலி ருந்தே இந்த இயக்கத்தில் தீவிரப் பங்காற்றி வரு கிறேன். முன்னாளில் இடதுசாரி சோஷலிஸ்ட் கட்சி என்று அழைக்கப்பட்ட பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சியில் 30 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளேன். 23 ஆண்டு களாக கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினராக இருந்து வருகிறேன். 1904 ஆம் ஆண்டுலிருந்து 1923 ஆம் ஆண்டு வரை தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளராக பணியாற்றி னேன். 1913 ஆம் ஆண்டிலிருந்து 1923- ஆம் ஆண்டு வரை கட்சியின் சோபியா நகரத்தின் தேசியப் பிரதிநிதியாக பல்கேரியா நாடாளுமன்றத்தில் பணியாற்றினேன். மேலும் சோபியா நகரசபைக் குழுவிலும், சோபியா பிர தேசக் குழுவிலும் கட்சியின் பிரதிநிதியாகபணியாற்றி யுள்ளேன். அந்த சமயத்தில் அப்போதிருந்த இராணுவ ஸ்தாம் பொலிஸ்கி அரசாங்கம் தூக்கி எறியப்பட்டது. அதிகாரி கள், மாசிடோனியா பயங்கரவாதிகள் மேலும் சமூக ஜன நாயகவாதிகளால், வெளிநாடுகளின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த ராணுவப் புரட்சிக்கு ஜாரின் (இரஷ்ய மன்னர்) நேரடி ஆதரவும் இருந்தது.ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளிகளும் அறிவு ஜீவிகளும் கொலை செய்யப்பட்டனர். ஸதாம் பொலிஸ்கியும் கொலை செய்யப்பட்டார். மிகப் பெரிய கட்சியும் கலைக்கப் பட்டது. பெரும்பாலான மக்களின் அனைத்து உரிமை களும், சுதந்திரங்களும் ரத்து செய்யப்பட்டன. ராணுவ பாசிச ஆட்சி துவக்கப்பட்டது. தடையற்ற அடக்குமுறையின் விளைவாக மக்கள் எழுச்சி என்பது தவிர்க்க முடியாததாயிற்று. செப்டம்பர் 23- ஆம் தேதி அதிகார வெறிபிடித்த அடக்கு முறையாளர்களை எதிர்த்து ஒரு தொழிலாளர் விவசாயிகள் அரசை அமைக்க வேண்டி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தொழிலா ளர் விவசாயிகளின் எழுச்சி நிகழ்ந்தது. இந்த எழுச்சியில் கட்சியின் கட்டளைக்கு இணங்க நான் தீவிரமாகத் தலைமை வகித்துப் பங்காற்றினேன். ஒரு வார காலம் ஆயுதந்தாங்கி போராட்டம் நிகழ்ந்த பிறகு இந்த எழுச்சி தோற்கடிக்கப்பட்டது. இதனால் வரும் வழி நெடுகிலும் போராடிக் கொண்டே கிட்டதட்ட ஆயிரம் தோழர்களு டன் நான் யூகோஸ்லாவியா நாட்டின் எல்லைக்குள் நுழைந்தேன்.அங்கு அரசியல் கைதிகளாகவும் பின்னர் அரசியல் அகதிகளாகவும் நடத்தப்பட்டோம்.அந்த நாளி லிருந்து கடந்த பத்து வருடங்களாக வெளிநாடுகளில் நான் ஒரு அரசியல் அகதியாகவும் அரசியல் எழுத்தாள னாகவும் செயல்பட்டு வந்தேன் “ என்று கம்பீரமாக தனது வாதத்தை அந்த மன்றத்தில் வைத்தார். அந்த நபர் வேறு யாருமில்ல. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் டிமிட்ரோ என்பவராவார். உலகத்தி லேயே சிறந்த இனம் செமிடிக் இனம்தான் (ஜெர்மானிய இனம்). ஜெர்மனி முன்னேறாமல் இருப்பதற்கு யூதர்களும், கம்யூனிஸ்ட்டுகளும்தான் காரணம் என்று சொல்லிய சர்வதிகாரி ஹிட்லர் 1933 ஆம் ஆண்டு ஜூன் - 30இல்ஆட்சிக்கு வந்ததும் ஒரு நாளைக்கு 2000 பேர்களை கொல்ல வேண்டுமென்று தன்னுடைய சூறாவளிப்படைக்கு கட்டளையிட்டிருந்தான். அடுத்ததாக கம்யூனிஸ்டுகளை ஒடுக்க நினைத்த ஹிட்லர் ஐரோப்பாவின் ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக உலக கம்யூனிஸ்டு இயக்கம் சதிசெய்கிறது என்ற எண்ணத்தை ஜெர்மானிய மக்களிடம் உருவாக்க நினைத்து, 1938 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி மாலை ஜெர்மனியின் நாடாளுமன்றமான ரிச்ஸ்டாக்கை ஹிட்லரின் நாசிக்கட்சியினர் கொளுத்திவிட்டனர். ஆனால், கம்யூனிஸ்டுகள்தான் நாடாளுமன்றத்தை கொளுத்திவிட்டார்கள்..! என்று செய்தியை நாடெங்கும் பரப்பினார்கள். அதோடு மட்டுமல்லாமல், அந்த நாடாளுமன்ற கட்டத்திலிருந்து ஒரு டச்சு நாட்டைச் சேர்ந்த வான்டர்லுப் என்ற ஒரு கம்யூனிஸ்டை கைது செய்ததா கவும், அவன் பாக்கெட்டில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரசீது வைத்திருப்பதாகவும் ஜெர்மானிய போலீசு அறி வித்தது. இந்த சமயத்தில் 1923ஆம் ஆண்டு செப்டம்பர்- 23 ஆம் தேதி பல்கேரிய நாட்டில் நடந்த பாசிச எதிர்ப்பு கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்ததால் பல்கேரிய நீதி மன்றம் ஜார்ஜ் டிமிட்ரோவுக்கு இரண்டு மரண தண்ட னையை விதித்திருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து இதற்கு தொழிலாளி வர்க்கத்திடம் ஆதரவு திரட்டு வதற்காக ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினுக்கு வந்து போன்ஹாப் ஹோட்டலில் தங்கியிலிருந்த போது 1933இல் மார்ச்- 9 ஆம்தேதி இரண்டு பல்கேரிய கம்யூ னிஸ்ட்களோடு சேர்த்து ஜார்ஜ் டிமிட்ரோவும் கைது செய்யப்பட்டார். பிறகு, அவர் மீது உலகப் புகழ் பெற்ற ரிச்ஸ்டாக் வழக்கு தொடுக்கப்பட்டு ஆறுமாத காலம் வரை விசா ரணையே இல்லாமல் ஹிட்லர் அரசாங்கம் அவரை சிறை யில் வைத்திருத்தது. ரிச்ஸ்டாக் வழக்கிற்காகத்தான் ஜார்ஜ் டிமிட்ரோவை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தி ருந்தனர். அந்த வழக்கில் ஹிட்லரின் மந்திரிகளான கோய ரிங் கோயபல்ஸ், இன்னும் பல பேர் டிமிட்ரோவுக்கு எதிராக சாட்சியமளித்தனர். ஆனால், இதைக்கண்டு மனம் தளராத டிமிட்ரோவ் ஹிட்லரின் பொய் வழக்கை எதிர் கொள்ள, ஜெயிலில் இருந்தபடியே, 6700 பக்கம் கொண்ட ஜெர்மானிய வர லாறையும், ஹிட்லரின் வாழ்க்கையும், அவனது அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை சகலவிதமான விவரங்களை சேகரித்து வைத்துக் கொண்டார். பிரிட்டன், அமெரிக்கா, பிரெஞ்சு, டச்சு, ஜெர்மனி என்று ஒரு நாளைக்கு 25 பத்திரிகைகளுக்கு மேல் படித்து உலக அறிவை பெற்றிருந்தார். தான் பெற்ற உலக அறிவை வைத்துக் கொண்டு லீப்சீக் நீதிமன்றத்தில் தனக்காக ஆணித்தரமாக வாதாடினார். இது ஒருபுறம் என்றால், மறுபுறத்தில் ஜார்ஜ் டிமிட்ரோவின் விடுதலையை விரும்பிய ஐரோப்பிய உழைப்பாளி மக்கள் ஜார்ஜ் டிமிட்ரோவுக்காக திறமை வாய்ந்த வழக்கறிஞர்களையும், அரசியல் தலைவர் களையும் கொண்டு பிரான்சின் தலைநகரமான பாரிசில் சர்வதேச விசாரணை கமிஷனை அமைத்திருந்தினர்.இந்த கமிஷன் மூலம் பழுப்பு நுால் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் ரிச்ஸ்டாக்கட்டடத்துக்கு தீ வைப்பதற்கு யார் காரணம் என்று ஆப்பட்டமாக ஆதாரத்தோடு எழுதியிருந்தது. இது ஜார்ஜ் டிமிட்ரோ வுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது. அவரது எதிர்வாதத்திற்கு பொய் சாட்சிகளால் பதில் சொல்ல முடியவில்லை. ரிச்ஸ் டாக் எரிப்பு வழக்கில் டிமிட்ரோ தான் குற்ற வாளி என்பதற்கு சரியான ஆதாரங்களை நிரூபணம் செய்த காரணத்தினால் லீப்சிக் நீதிமன்றம் டிமிட்ரோ வை விடுதலை செய்தது. ஹிட்லரின் குகைக்கு சென்று சிங்கத்தைப் போல் அவனது முகத்துக்கு எதிரே கர்ஜித்து விட்டு திரும்பிய பெருமை வரலாற்றில் ஜார்ஜ் டிமிட்ரோ வுக்கு தான் உண்டு. ஜார்ஜ் டிமிட்ரோவ் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டாலும் அவரது பல்கேரிய குடியுரிமையை அன்றைய பல்கேரிய பாசிஸ்ட் அரசாங்கம் அங்கீகரிக்க மறுத்தது. ஆனால் அந்த மார்க்சிய போராளியை சோவி யத் யூனியன் குடியுரிமை வழங்கி ஏற்றுக் கொண்டது. ஜெர்மனியில் பாசிஸ்ட்டுகளின் கோர முகத்தை நேரடி யாக அனுபவித்த உணர்வு ஜார்ஜ் டிமிட்ரோவுக்கு இருந்தது. இதனையெல்லாம் மனதில் கொண்டு 1935 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 இரண்டாம் தேதி அன்று ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவில் உள்ள சோவி யத் மாளிகையில் நடத்த சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஏழாவது பேராயத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். பாசிசத்தை முறியடிக்க எதிரிக்கு எதிரி, நமக்கு நண்பன் என்ற வழியில், ஒவ்வொரு கம்யூ னிஸ்ட் கட்சியும் சமூகத்தில் இருக்கும் சற்று முற்போக் கான ஜனநாயக சக்திகளையும். பாட்டாளி மக்களையும் ஒன்று திரட்ட வேண்டும் . இதற்கு ஐக்கிய முன்னணி தந்திரம் - என்றும், இந்த ஐக்கிய முண்ணனிக்கு தொழி லாளி வர்க்கம் தலைமை ஏற்க வேண்டும் என்றும் வலி யுறுத்தினார். இந்த ஐக்கிய முன்னணி தந்திரம் என்பது வெறும் பாசிச எதிர்ப்புக்கு மட்டுமல்ல, கம்யூனிஸ்டு கட்சி அமைக்கப் போகும் பட்டாளி வர்க்க சர்வதிகாரத்தின் இது ஒரு இடைநிலை என்றார். டிமிட்ரோவ் வகுத்து கொடுத்த ஐக்கிய முன்னணி தந்திரத்தை உலகத்தின் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் தாரக மந்திரமாக ஏற்றுக் கொண்டன. குறிப்பாகஇந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் 25 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியிலிருந்த ஜோதிபாசு அவர்களின் அரசாங்கம், ஆரம்பத்தில் ஐக்கிய முன்னணி தந்திரத்தின் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய முன்னணி தந்திரத்தை வகுத்துக் கொடுத்த ஜார்ஜ் டிமிட்ரோவ் உலகப்போர் கடுமையாக நடந்து கொண்டிருந்த சமயம் சோவியத் யூனியனின் பிரஜை யாக இருந்து கொண்டே பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப் போராட்டம் நடத்துவதற்கு வழிகாட்ட.. 1944 செப்டம்பர்- 9இல் பல்கேரியாவில் சோவியத் ராணு வத்தின் உதவியோடு ஆயுதப் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றது. இதன்பிறகு பல்கேரியாவின் தொழி லாளர் வர்க்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் தலைமை யேற்ற ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டது. 1945ஆகஸ்ட்21இல்ஜார்ஜ் டிமிட்ரோவ் 22 ஆண்டு களுக்குப் பிறகு பல்கேரியக் குடிமகனாக நாடு திரும்பி னார். அதே ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளு மன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்று ஸ்டாலினின் வழிகாட்டுதலோடு பல்கேரியாவில் பிரதம மந்திரியானார். நம்ம ஊர் அரசியல்வாதிகளெல்லாம் சாதாரண வட்டச்செயலாளராக ஆனதுமே அடிக்கும் கூத்துகளை நாள் தோறும் இங்கு பார்க்கிறோம். ஆனால் ஜார்ஜ் டிமிட்ரோ 25 கம்யூனிஸ்ட் கட்சிகளை உள்ளடக்கிய மேற்கு ஐரோப்பிய பிரிவுக்கு தலைவராகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு கழகம், சர்வதேசத் தொழிலாளர் நிவாரண அமைப்பு, சர்வதேச தொழிற்சங்க ஐரோப்பிய பிரிவு, சர்வதேச விளையாட்டுத் துறைக்குழு ஆகியவற்றில் பொறுப்புகள் வகித்ததுடன், இண்டர் கோர் சர்வதேச பத்திரிகைச் செய்தி என்ற வெளியீட்டின் ஆசிரியராக வும் இருந்தார். பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாள ராகவும், உலக கம்யூனிஸ்ட் கட்சிகளெல்லாம் உறுப்பி னராக இருந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவராக, அது 1943-ஆண்டில் கலைக்கப்படும் வரை இருந்தார். உலக உழைப்பாளி மக்களின் பிரதிநிதியாக எவ்வ ளவோ பெரிய பொறுப்புகளை ஏற்று வழிநடத்திய பொழு தும் டிமிட்ரோ. நான் ஒரு சாதாரண கம்யூனிஸ்ட்டுதான் என்று அடக்கத்தோடு சொன்னார்.அந்த சர்வதேச கம்யூ னிச போராளி 1949டு ஜூலை - 2 இல் காலமானார்.
