tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பார்தி

சத்தீஸ்கரிலும், கேரளாவிலும் சங்கிகள் புலம்பெயர்ந்த தலித் தொழிலாளர்களை ‘வங்கதேசத்தவர்கள்’ என்று முத்திரைக் குத்தி கொன்றனர். இப்போது திரிபுராவில் அஞ்செல் சக்மா என்கிற எம்பிஏ மாணவரை ‘சிங்கி’ என்றும் ‘சீனாக்காரர்’ என்றும் சொல்லி கொன்றிருக்கிறார்கள். சங்கிகளின் வெறுப்பு அரசியல், உயிர்க்கொல்லி வைரஸ் போல பரவி உயிர் பறித்துக் கொண்டிருக்கிறது.

ஊடக உண்மை சரிபார்ப்பாளர் முகமது ஜுபைர்

பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தின் குர்கானில் 2 ஏக்கர் சொந்த நிலம், மாநில அரசின் சட்டப்பூர்வ அனுமதிகளையும் பெற்றிருந்தும், கிறிஸ்தவர்கள் அங்கு தேவாலயம் கட்ட திடீரென அனுமதிக்கப்படவில்லை. காரணம் பஜ்ரங் தளம், விஎச்பி உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் தேவாலயம் கட்டுவதை விரும்பவில்லை.

உச்சநீதிமன்ற பார்கவுன்சில் தலைவர் கபில் சிபல்

மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி டிச., 26 அன்று என்டிடிவி தொலைக்காட்சியில்,”இஸ்ரேல் நாடு காசா மக்களுக்குக் கற்பித்த பாடத்தைப் போலவே, இந்தியாவும் முஸ்லிம்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்க வேண்டும்” என்று பேசினார். இன்னும் எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை.

மூத்த பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது இந்து வலதுசாரி அமைப்புகள் நடத்திய தாக்குதல்கள் குறித்து சில நாளிதழ்கள் தலையங்கங்களை எழுதியுள்ளன. அவற்றில் சில மோடி, பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் ஆகிய பெயர்களை நேரடியாகக் குறிப்பிடுவதைத் தவிர்ப்பதற்காக மிகவும் சுற்றிவளைத்து எழுதப்பட்டுள்ளன.