tamilnadu

img

இந்தியாவில் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி புழக்கம்

இந்தியாவில் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி புழக்கம்

இந்தியாவில் பரவலாகப் பயன் படுத்தப்படும் “அபய்ராப் (Abhayrab)” வெறிநாய்க்கடி தடுப்பூசி தெலுங்கானா மாநிலம் ஹைத ராபாத்தைச் சேர்ந்த இந்தியன் இம்யூ னாலஜிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், அபய்ராப் பெயரில் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பதாக ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத் துள்ளது. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய சுகாதாரத்துறையின் அறிக்கை படி, “அபய்ராப் போலி தடுப்பூசிகள் 2023 நவம்பர் 1ஆம் தேதி முதல் பயன்பாட்டில் உள்ளன. மேற்கண்ட காலக்கட்டத்தில் இந்தியாவில் இந்தத் தடுப்பூசியைப் பெற்ற ஆஸ்திரேலியப் பயணிகள் அல்லது அங்கு வசிப்பவர்கள், ஆஸ்தி ரேலியாவில் அங்கீகரிக்கப்பட்ட மாற்றுத் தடுப்பூசிகளை மீண்டும் போட்டுக் கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தி யுள்ளது.  ஏன் இந்த எச்சரிக்கை? போலியான தடுப்பூசிகள் போதிய நோய் எதிர்ப்புச் சக்தியைத் தராது. வெறி நாய்க்கடி என்பது 100% உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோய் என்பதால், போலியான மருந்துகளைப் போடுவது உயிருக்கு ஆபத்தானது என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.  மோடி அரசின் அலட்சியம் அபய்ராப் தடுப்பூசியை தயாரிக்கும் இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் போலி தடுப்பூசிகள் குறித்து ஏற்கனவே இந்திய மருந்துக் கட்டுப் பாட்டு ஆணையத்திடம் புகார் அளித் துள்ளது. சந்தையில் ஒரு குறிப்பிட்ட பேட்ச் மருந்துகள் போலியாக இருப்ப தை தாங்களே கண்டறிந்து தகவல் தெரி வித்ததாக அந்நிறுவனம் கூறியது. தில்லி, மும்பை, அகமதாபாத் மற்றும் லக்னோ போன்ற முக்கிய நகரங்களில் இத்தகைய போலி மருந்துகள் கண்டறி யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன. ஆனால் மோடி அரசு இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. மருத்துவர்கள் அறிவுறுத்தல் 2023 நவம்பர் முதல் இந்தியாவில் வெறிநாய்க்கடி தடுப்பூசி (குறிப்பாக அபய்ராப்) போட்டிருந்தால், உடனடி யாக ஒரு மருத்துவரை அணுகி தடுப்பூசி யின் நம்பகத்தன்மையைச் சரிபார்த்து, தேவைப்பட்டால் மாற்று டோஸ்களைப் பெற்றுக்கொள்வது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.