tamilnadu

img

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் தமிழல்லாமல் வேறு மொழியில் பேச சொல்ல முடியுமா?  

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் தமிழல்லாமல் வேறு மொழியில் பேச சொல்ல முடியுமா?  

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முத லமைச்சரும், மக்கள் ஜனநாய கக் கட்சியின் (பிடிபி) தலைவரு மான மெகபூபா முப்தி வெள்ளியன்று ஸ்ரீநகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மெகபூபா முப்தி காஷ்மீரி மொழியில் பேசத் தொடங்கினார். அப்போது “கோடி மீடியாவைச் (பாஜக ஊதுகுழல்)” சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர்,”உருது மொழியில் பேசுங்கள்” எனக் கூறினார்.  இதனால் அதிருப்தியடைந்த முப்தி, “உங்களுக்கு மொழிபெயர்ப்பு வேண்டு மா? நீங்கள் வேண்டுமெனில் மொழி பெயர்த்துக் கொள்ளுங்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் சென்று தமிழல்லாமல் வேறு மொழியில் பேசச் சொல்லி உங்களால் கேட்க முடியுமா? (தைரியம் இருக்கிறதா) காஷ்மீரி மொழியில்தான் நான் பேசுவேன். தாய் மொழிக்கு மரியாதை அளிக்க கற்றுக் கொள்ளுங்கள். காஷ்மீரி மொழிக்கும் மரியாதை அளியுங்கள். எங்களிடம் மிஞ்சி இருப்பது எங்களின் மொழி மட்டும்தான்” எனக் கூறினார்.  அதாவது ஒடுக்கப்பட்டதாக எண்ணி காஷ்மீரில் இவ்வாறு கேட்கிறீர்கள். தமிழ்நாட்டிலோ அல்லது தமிழ்நாடு முத லமைச்சர் ஸ்டாலினிடமோ தமிழல்லா மல் வேறு மொழியில் பேசச் சொன்னால் நிலைமை என்ன ஆகும் என்று பாருங் கள் என தாய்மொழியை தவிரத்து உருது மொழியில் பேச சொன்ன பத்திரிகையா ளருக்கு எச்சரிக்கை செய்துள்ளார். இது தொடர்பான செய்தி மற்றும் வீடி யோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.