பிரதமர் மோடி தன்னிச்சையாக செயல்படுகிறார்
காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே தலைமையில் தில்லி யில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய ராகுல் காந்தி,‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை ரத்து செய்யும் முடிவை, அமைசசரவையுடன் ஆலோ சிக்காமல் பிரதமர் மோடி தன்னிச்சை யாக எடுத்துள்ளார். எப்படி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தன்னிச்சை யாக எடுத்தாரோ அப்படியே இந்த முடி வையும் மோடி எடுத்துள்ளார்” என அவர் குற்றம்சாட்டினார்.