கோழி முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு இல்லை கர்நாடக மாநிலத்தில் கோழி
முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி யது. இதனால் கர்நாடகாவில் முட்டை விற்பனை மந்தமாகியது. இதையடுத்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை முட்டைகளை இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தது. ஆய்வின் முடிவில், முட்டையில் புற்று நோயை உண்டாக்கும் ரசாயன நச்சுகள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக சுகாதா ரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில்,“முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது. அதனால் பொதுமக்கள் அச்சமின்றி முட்டையை சாப்பிடலாம். இந்த தகவலை இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் கூறி யுள்ளது” என அவர் கூறினார்.