இந்தியாவில் முஸ்லிம் மீது தாக்குதல் நடத்த கொரில்லா போராம் தில்லியில் இந்து இளைஞர் படை என்ற பெயரில் இந்துத்துவா குண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். தெலுங்கா னா எம்எல்ஏவும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ராஜா சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முஸ்லிம்களை பகிரங்க மாக இலக்கு வைத்துப் பேசியது மட்டு மல்லாமல், முஸ்லிம்களுக்கு எதிராக “கொரில்லா முறைப் போர்” (எதிர்பாராத நேரத்தில் திடீரெனத் தாக்கிவிட்டு, மறைந்துவிடுவது) முறைக்கு ஆட்க ளைத் திரட்டும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த “கொரில்லா முறைப் போரில்” பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் பெயர்களைச் சமர்ப்பிக்குமாறு அங்கு கூடியிருந்தவர்க ளிடம் டி.ராஜா சிங் வலிறுத்தியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள் ளன. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் கண்டனத்துடன் வைரலாகி வருகிறது.
