states

உன்னாவ் பாலியல் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கிய தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளும், சர்ச்சைகளும்

உன்னாவ் பாலியல் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கிய தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளும், சர்ச்சைகளும்

புதுதில்லி உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுப வித்து வந்த முன்னாள் பாஜக எம்எல்ஏ வும், ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு மிக நெருக்க மானவருமான குல்தீப் சிங் செங்காருக்கு தில்லி உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் மற்றும் தண்டனை இடைநிறுத்தம் வழங்கி உத்தர விட்டுள்ளது. இந்த தீர்ப்பு நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதர் சங்கம் உள்ளிட்ட மகளிர் அமைப்புகள் நாடு முழுவ தும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், குல்தீப் சிங் செங்காருக்கு ஜாமீன் வழங்கிய தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி களின் பின்புலம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி  தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர் பாக தில்லி ஆம் ஆத்மி ஐடி விங் தகவல் வெளி யிட்டுள்ளது.  நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஜனவரி 2025இல் தில்லி உயர்நீதிமன்ற நீதி பதியாக பதவியேற்றார். இவர் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிந்தைய கலவர வழக்குகளில் குஜராத் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர். அதே போல அயோத்தி வழக்கில் ராம ஜென்மபூமி தரப்பிற்காக ஆஜராகி, அங்கு கோவில் கட்டப்பட வேண்டும் என்ற வாதங்களையும் நீதி மன்றங்களில் முன்வைத்தவர். சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் நிகழ்வு ஒன்றில் பேசிய வைத்தியநாதன் சங்கர்,”பிராமண சமூகத்தினர் வரலாற்று ரீதியாக இந்து மறுமலர்ச்சியுடன் ஆழமான தொடர்பைக் கொண்டவர்கள்” என்று  பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். குறிப்பாக  தில்லி கலவரச் சதி வழக்கில் 5 ஆண்டுக ளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்த அமர்விலும் நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் முக்கியப் பங்கு வகித்தவர் ஆவார். நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் மார்ச் 2020 முதல் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து வருகிறார். தில்லியில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் சிறுபான்மையினரின் சொத்துக்கள் இடிக்கப்படுவதற்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, “பொது நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்பவர்களு க்கு அங்கு வசிக்க அடிப்படை உரிமை இல்லை” என சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு களை வழங்கினார். ஜக்கி வாசுதேவின் ஈஷா  அறக்கட்டளை மீதான மோசடி புகார்கள் குறித்த விமர்சனப் பதிவுகளை (குறிப்பாக யூடியூபர் ஷியாம் மீரா சிங்கின் வீடியோக்கள்) சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தர விட்டார். உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோ ருக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி ஹரிஷ் சங்கர் தலைமையிலான அமர்வில் இவரும் ஒரு பகுதியாக இருந்தார் என தில்லி ஆம் ஆத்மி ஐடி விங் தகவல் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர்,  சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோரின் பின்புலம் இவ்வாறு உள்ளது. அதனால் ஆர்எஸ் எஸ் - பாஜகவிற்கு நெருக்கமில்லாமல் சர்ச்சைக் குரிய வகையில் உன்னாவ் பாலியல் குற்றவாளி யான குல்தீப் சிங் செங்காருக்கு ஜாமீன் வழங்கி,  தண்டனையை நிறுத்தி வைத்து இருக்க மாட்டார்கள் என சமூகவலைதளங்களில் குற்றச் சாட்டுகள் கிளம்பியுள்ளன.