states

img

இந்தியாவை உலுக்கும் வெறுப்பு அரசியல் கிறிஸ்தவர்கள் மீதான வெறியாட்டம் பாரீர்!

இந்தியாவை உலுக்கும் வெறுப்பு அரசியல் கிறிஸ்தவர்கள் மீதான வெறியாட்டம் பாரீர்! 

2025-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இந்தியா முழுவதும் கிறிஸ்தவர்கள், தேவாலயங்கள் மற்றும் பாதிரியார்கள் மீது இந்துத்துவ சக்திகள் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறை, தேசத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லண்டனின் ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட சர்வ தேச ஊடகங்கள் இத்தாக்குதல்களை முக்கி யச் செய்திகளாக வெளியிட்டுள்ளன. உலகளா விய கிறிஸ்தவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள போதிலும், இந்துத்துவ சித்தாந்தத்தின் தீவிரத்தை அறிந்தவர்களுக்கு இது வியப்பளிக்கவில்லை. குறிப்பாக, வட இந்தியாவில் பொதுச் சிந்தனைக்குள் இந்த  வெறுப்பு அரசியல் எந்தளவுக்கு ஊடுருவியுள் ளது என்பதையே இச்சம்பவங்கள் பறை சாற்றுகின்றன. தென் மாநிலங்களிலும் இத்த கைய போக்கு தலைதூக்குவது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு விடுக்கப்பட்ட பெரும் எச்சரிக்கையாகும்.  மூர்க்கத்தனமான தாக்குதல்கள்  பெரும்பான்மையான இந்து மக்களை ஆன்மீக ரீதியாக அல்லாமல், அரசியல் அணி திரட்டலுக்கு முனையும் சங் பரிவார அமைப்பு கள், இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களை யும் இந்துக்களின் எதிரிகளாகக் கட்டமைக் கின்றன. இதற்காக எண்ணற்ற வழிகளில் பிரச்சா ரமும் சிந்தனைச் சலவையும் செய்யப்படு கின்றன. அதன் கோர வெளிப்பாடான சில சம்பவங்கள் வருமாறு:  மத்தியப் பிரதேசம்: ஜபல்பூரில் கிறிஸ்துமஸ் அன்னதான நிகழ்வின் போது, பாஜக நகர உதவித் தலைவர் அஞ்சு பார்கவா தலைமை யில் கும்பல் புகுந்தது. அங்கிருந்த பார்வை மாற்றுத்திறனாளி சிறுமியிடம், “இந்த ஜென்மத் தில் பார்வை இல்லாத நீ, அடுத்த ஜென்மத்தி லும் அப்படியே பிறப்பாய்” எனச் சபித்த தோடு, மதமாற்றப் புகார் கூறி கடும் ரகளை யில் ஈடுபட்டனர். “குங்குமம் வைத்துக்கொண்டு ஏன் மாதா கோவிலுக்கு வருகிறீர்கள்?” எனக் கூச்சல் போட்ட இவர்கள், மக்களின் விளக்கங் களைக் காதுகொடுத்துக் கேட்கக்கூடத் தயா ராக இல்லை.  உத்தரப் பிரதேசம்: காசியாபாத்தில் பாதிரி யாரின் சட்டையைப் பிடித்து இழுத்து இயேசு வின் பிறப்பு குறித்து இழிவாகப் பேசினர். “இந்தி யாவில் வேதாந்தங்களுக்கும் மனுஸ்மிரு திக்குமே இடமுண்டு; பைபிளுக்கு இல்லை” எனக் கூப்பாடு போட்டனர். இத்தாக்குதலை முன்னின்று நடத்திய சத்யநிஷ்டா ஆர்யா என்ப வர், வங்கதேசத்தைச் சேர்ந்த முன்னாள் இஸ்லா மியர்; இப்போது சனாதனியாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறார்.  ஒடிசா: பூரியில் கிறிஸ்துமஸ் தொப்பிகளை விற்ற சிறு வணிகரை, “ஜெகந்நாதர் மண்ணில் இதை அனுமதிக்க மாட்டோம்” என ராதா மாதவ் தாஸ் தலைமையிலான கும்பல் துரத்தியடித்தது. சத்தீஸ்கர்: காங்கர் மாவட்டத்தில் பல தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ராய்ப்பூரில் கிறிஸ்தவப் பழங்குடியினரின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது என மிரட்டியதோடு, புதைக்கப்பட்ட உடல்களைத் தோண்டி எடுத்து அவமதித்தனர். 25-ஆம் தேதி  பந்த் நடத்தி, வணிக வளாகங்களில் இருந்த அலங் காரங்களை அடித்து நொறுக்கி, வாடிக்கை யாளர்களின் பெயர்களைக் கேட்டு இந்துக்கள் அல்லாதோரைத் தாக்கினர்.  அசாம் & உத்தரகண்ட்: அசாமில் செயிண்ட் மேரி  பள்ளியில் புகுந்து இயேசு சிலையை உடைத்த னர். உத்தரகண்டின் ஹரித்துவார், ரிஷிகேஷ் பகுதிகளில் விடுக்கப்பட்ட மிரட்டல்களால் பல  விடுதிகளில் திட்டமிடப்பட்ட விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. தில்லி லஜ்பத் நகரிலும் பஜ்ரங் தளத்தினர் குழந்தைகளை மிரட்டித்துரத்தினர்.  இந்த ஆண்டு நவம்பர் வரை கிறிஸ்தவர் கள் மீது 700-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால், 45 புகார்கள் மட்டுமே  காவல்துறையினரால் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது சட்டம் - ஒழுங்கின் அவலநிலையைக் காட்டுகிறது.  கேரளாவின் நிலையும் பிரதமரின் இரட்டை வேடமும்  18% கிறிஸ்தவர்கள் வாழும் கேரளாவில், மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க சங் பரி வாரம் திட்டமிட்டுச் செயல்படுகிறது. பாலக் காடு போன்ற இடங்களில் தாக்குதல்கள் நடந்தா லும், அம்மாநில மக்கள் அதற்கு அஞ்சாமல் பஜனையும் கிறிஸ்துமஸ் விழாவும் இணைந்து நடத்தி மத ஒற்றுமையை நிலைநாட்டினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனை த்து மதத்தினரையும் இணைத்து விழாவினை நடத்தியது. முதலமைச்சர் பினராயி விஜயன்,  சங் பரிவார மத வெறி சக்திகளுக்கு எதிராகக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  மறுபுறம், பிரதமர் மோடியின் செயல்பாடு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தில்லி யில் தேவாலய நிகழ்வில் பங்கேற்ற அவர், கிறிஸ்தவர்கள் மீதான நாடு தழுவிய வன்முறைகள் குறித்து ஒரு கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை. தாய்லாந்து-கம்போடியா போரில் விஷ்ணு கோவில் பாதிக்கப்பட்டதற்கு வருந்தும்  மோடி அரசு,  உள்நாட்டில் தேவாலயங்கள் இடிக்கப்படு வதை மௌனமாக  வேடிக்கை பார்ப்பது அப்பட்டமான இரட்டை வேடமாகும். உத்தரப் பிரதேசத்தில் கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாகப் பாலியல் குற்றவாளி ஆசாராம் பாபு முன்னெடுத்த ‘துளசி விழா’ திணிக்கப்படுவது சிறுபான்மையின ருக்கு எதிரான ஒடுக்குமுறையின் உச்சமாகும்.  ஒன்றுபட்டு முறியடிப்போம்!  சாதாரண மக்களின் சிந்தனையில் இந்துத்துவம் திணிக்கப்படுவதன் விளைவே இத்தாக்குதல்கள். இஸ்லாமியர்களுக்கு எதி ராகத் தொடங்கப்பட்ட வன்முறை, இப்போது கிறிஸ்தவர்கள் மீதும் ஏவப்படுகிறது. மத  ஒற்றுமையை விரும்பும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து, இந்த வெறுப்பு அர சியலை கூடுதல் வலிமையுடன் எதிர்கொண்டு முறியடிப்பதே இன்றைய காலத்தின் கட்டாய மாகும்.