தில்லி உயர்நீதிமன்றத்திற்கு முன்பு போராட்டம்
உன்னாவ் பாலியல் வன் கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எதிராக வெள்ளியன்று தில்லி உயர்நீதி மன்றத்துக்கு வெளியே போராட்டம் மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர்கள், சமூக ஆர்வலர் யோகிதா பயானா உள்ளிட்டோர் தில்லி உயர்நீதி மன்றத்துக்கு வெளியே பதாகைகளை ஏந்தியபடி,”பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்ப தை நிறுத்துங்கள்” என முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தின்போது பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “எனது மகள் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்ததால் உயர்நீதிமன்றத்துக்கு வந்து போராடுகிறேன். நான் ஒட்டு மொத்த உயர்நீதிமன்றத்தையும் குறை கூறவில்லை. மாறாக, எங்கள் நம்பிக்கை யைச் சிதைத்த அந்த இரண்டு நீதிபதி களை மட்டுமே குறை கூறுகிறேன். முன்னர் நீதிபதிகள் எங்கள் குடும்பத்துக்கு நீதி வழங்கினர். ஆனால், இப்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இது எங்கள் குடும்பத்துக்கு இழைக்கப் பட்ட அநீதி ஆகும். எனக்கு உச்சநீதி மன்றத்தின் மீது நம்பிக்கை இருப்ப தால், நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம்” என்று அவர் கூறினார்.
