tamilnadu

img

தோழர் ஆர். நல்லகண்ணுவின்  101 ஆவது பிறந்தநாள் முதலமைச்சர் வாழ்த்து

தோழர் ஆர். நல்லகண்ணுவின்  101 ஆவது பிறந்தநாள் முதலமைச்சர் வாழ்த்து

சென்னை: இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணுவின் 101  ஆவது பிறந்தநாள் டிச.26 (வெள்ளிக் கிழமை) அன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத் தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 1948 காலக் கட்டத்தில் பொதுவுடைமைக் கட்சி தடை  செய்யப்பட்ட போது கைது செய்யப்பட்டவர்களில் நல்ல கண்ணுவும் ஒருவர். தமிழ்நாட்டில் பொதுவுடைமைக் கருத்தி யல் வளர உழைத்ததில் அவரது பங்கு மிகப்பெரியது. முதலமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில், “விடுதலைப்  போராட்ட வீரராகவும், விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்து, இன்றளவும் நமக்கு வழிகாட்டும்  நூற்றாண்டு நாயகர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சியான, எண்ணற்ற இளைஞர்களுக்கு எடுத்துக் காட்டான தாங்கள் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாட்கள்  நிறைவாழ்வு வாழ்ந்திட விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்