அமெரிக்க ஆயுத நிறுவனங்கள் மீது சீனா தடை
பெய்ஜிங்,டிச.26- தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ததற்காக, அமெரிக்காவின் 10 அதிகாரிகள் மற்றும் 20 ஆயுத நிறுவனங்கள் மீது சீனா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. கடந்த வாரம் 11 பில்லியன் டாலர்கள் (42 ஆயிரம் கோடி) அளவு மதிப்பிலான ஆயுதங்க ளை தைவானுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் கொடுத்தது. இதுவே அமெரிக்கா இதுவரை தைவானுக்கு வழங்கிய மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தமாகும். இது சீனாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இந்த ஆயுத விற்பனை நடவடிக்கை ஆபத்தானது, இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று சீனா எச்சரித்தது. எனினும் அமெரிக்கா இந்த ஆய்த விற்ப னையை நிறுத்தவோ மறு பரிசீலனை செய்யவோ விருப்பம் காட்டவில்லை. மாறாக ஆசிய நாடு களுக்குள் குழப்பத்தை உருவாக்கும் வேலையை மட்டுமே செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தான் சீனா இந்த தடை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமெரிக்கா வின் போயிங் நிறுவனத்தின் செயின்ட் லூயிஸ் கிளை, நார்த்ரோப் க்ரம்மன், எல்3ஹாரிஸ் உள்ளிட்ட 20 ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் மீது தடை விதித்துள்ளது. மேலும் அண்டுரில் என்ற ஆயுத உற்பத்தி நிறுவனத்தின் நிறுவனர், அமெரிக்காவில் உள்ள சில ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் 9 உயர்மட்ட அதிகாரிகள் என மொத்தம் 10 பேர் மீதும் தடை விதித்துள்ளது. தடைக்குள்ளான நபர்களுக்கு சீனாவில் சொத்துக்கள் இருந்தால் அவை முடக்கப்படும். மேலும், சீன நிறுவனங்கள் அல்லது தனிநபர் கள் இவர்களுடன் வணிகம் செய்யத் தடை விதிக் கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 10 நபர்களும் சீனாவிற்குள் நுழையவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. தைவான் விவகாரம் என்பது சீனாவின் நலன் சார்ந்த மிக முக்கியமான விஷயம். சீனா- அமெரிக்கா இடையிலான உறவில் தைவான் தொடர்பான விவகாரம் என்பது யாரும் மீறக் கூடாத ஒரு சிவப்புக் கோடு என்று சீன வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
50 ஆண்டுகளுக்கு பிறகு சோமாலியாவில் தேர்தல்
சோமாலியாவில் சுமார் 50 ஆண்டு களுக்குப் (1960-களுக்குப்) பிறகு நேரடி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. அந்நாட்டு தலைநகரான மொகாடிஷுவில் வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்த லில் 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்தனர். 16 மாவட்டங்களில் உள்ள 390 உள்ளாட்சி மன்ற இடங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெற்றது. இதில் 20 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 1,604 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அமைதி விரும்பாத ஐரோப்பா: ரஷ்யா குற்றச்சாட்டு \
ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட எந்த விருப்பமும் காட்டவில்லை. உக்ரைன் மூலமாக போரை தொடர்ந்து நடத்தவும் பதற்றத்தை அதிகரிக்கவுமே முயற்சி செய்து வருகின்றன என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனுக்கு நிதி யுதவி அளிப்பதாகக் கூறிவிட்டு, அந்தப் பணத்தை மீண்டும் தங்களே வாங்கிக்கொள்ள அந்நாடுகள் திட்டமிடுவதாகவும் அவர் கூறி யுள்ளார்.
அரசியல் பழிவாங்கல் முகமது யூனுஸ் உதவி?
வங்கதேச மாணவர் இயக்க தலைவர் உஸ் மான் ஹாடி படுகொலையில் இடைக்கால அரசுக்கு தொடர்பு உள்ளது. அவர்களின் ஆதரவுடன் தான் கொலை நடந்துள்ளது என அவரது சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார். இடைக்கால அரசு அமைந்த பிறகு அக்கட்சியினர் மீது கடும் ஒடுக்குமுறை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கட்டவிழ்த்து விடப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான பிஎன்பி-யின் இடைக்காலத் தலைவர் தாரிக் ரஹ்மான் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் அவர் வங்கதேசம் வந்துள்ளார்.
பேச்சு நடைபெறும் போதும் கம்போடியா - தாய்லாந்து மோதல்
கம்போடியா-தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையிலும் தொடர்ந்து எல்லையில் மோதிக்கொண்டுள்ளன. இம்மாதம் மீண்டும் தொடங்கிய மோதலில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இரு நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர்களும் சனிக்கிழமை சந்திக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், கடந்த மூன்று நாட்களாக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
‘முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை வேண்டும்’
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு 10 ஆண்டு சிறை தண்ட னை விதிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறி ஞர்கள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முயன் றார். இதற்கு எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்தச் செயலுக்காக அவர் மீது நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றத்தால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு வாதத்தில் தான் இவ்வாறு கூறியுள்ளனர்.
