“சுரண்டலுக்கு எதிரான கருத்தே நமது வலிமையான ஆயுதம்”
பெங்களூரில் உ.வாசுகி முழக்கம்
கர்நாடக மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் 45 நாட்கள் பயணித்து, பல்லாயிரக் கணக்கான மக்களை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை அரசியல் உரை யாடலாக மாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘மாபெரும் மக்கள் சந்திப்பு இயக்கம்’, பெங் களூரில் எழுச்சியுடன் நிறைவுபெற் றது. இந்த நிறைவு மாநாட்டை துவக்கி வைத்த அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி ஆற்றிய உரையில், “ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் சார்பு கொள்கைகளை யும், அதற்கு மாற்றான இடதுசாரி அர சியலின் அவசியத்தையும் முன்வைத்தார். வாழ்வாதாரமே கம்யூனிஸ்டுகளின் அரசியல் அரசாங்கங்களும் ஆளும் வர்க்கங் களும் சாதி, மதம் மற்றும் வெற்று வாக்குறுதிகளைக் கொண்டு மக்க ளைத் திசைதிருப்பும் இன்றைய சூழலில், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடுவதே உண்மையான அரசியல்” என்பதை உ.வாசுகி சுட்டிக்காட்டினார். “அரசியல் என்பது பதவிகளைப் பெறுவதற்கான சுய முன்னேற்றப் பாதை அல்ல; அது மக்களின் உரிமைகளுக்காக சமரசமின்றிப் போராடும் களமாகும். கர்நாடக மாநி லத்தில் நமது தோழர்கள் கடந்த 45 நாட்களில் மேற்கொண்ட இந்த இயக்கம், மக்களுக்கும் கட்சிக்கும் இடையிலான ஒரு நேர்மையான அர சியல் உரையாடல்” என அவர் பெரு மிதத்துடன் குறிப்பிட்டார். கார்ப்பரேட் - வகுப்புவாதக் கள்ளக்கூட்டணி பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தலைமையிலான பாஜக அரசு, நாட்டின் செல்வத்தை அதானி, அம்பானி போன்ற ஒருசில பெருநிறு வனங்களிடம் தாரைவார்த்து வருவ தாக அவர் கடுமையாகச் சாடினார். இது தனிப்பட்ட நட்பு அல்ல, மாறாக ‘கார்ப்பரேட்-வகுப்புவாத சதிகாரக் கூட்டின்’ வெளிப்பாடு என்று விவ ரித்த அவர், “90 சதவீத மக்களைப் புறக்கணித்துவிட்டு யாரிடம் வளர்ச்சி இருக்கிறது? ரேஷன் பொருட் களுக்காக மக்கள் ஏன் இன்னும் கையேந்த வேண்டும்? வளர்ச்சி என்பது பணக்காரர்களின் பைக ளுக்குச் செல்கிறதே ஒழிய, ஏழை களின் வீட்டு வாசலுக்கு வருவ தில்லை” என்று சாடினார். திட்டமிட்டு சிதைக்கப்படும் மக்கள் நலச் சட்டங்கள் இடதுசாரிகளின் போராட்டத் தால் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை உறுதிச் சட்டம், தற்போது பாஜக அரசால் அதன் உள்ளடக்கமே மாற்றப்பட்டு சவப்பெட்டியில் வைத்து ஆணி அடிக்கப்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார். ‘விக்சித் பாரத்’ என்பது ஒரு மாயை என்று குறிப்பிட்ட அவர், ராமனின் பெயரை தனது லாபத்திற்காக ஒரு விற்பனை பண்டமாக பாஜக பயன்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டினார். மேலும், 150 ஆண்டுகாலத் தியாகங்களால் வென்றெடுக்கப் பட்ட தொழிலாளர் சட்டங்கள், இன்று ஒரே நாளில் கார்ப்பரேட்டுகளுக்காக மாற்றப்பட்டுவிட்டன. தொழிலாளர் பாதுகாப்பு பறிக்கப்பட்டு, 70 சதவீதத் தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்பி ற்கு வெளியே தள்ளப்பட்டுள்ளதை அவர் கடுமையாகக் கண்டித்தார். சாதி ஒடுக்குமுறையும் வர்க்கப் போராட்டமும் சமூக ஒடுக்குமுறை குறித்துப் பேசிய உ.வாசுகி, “இந்தியச் சமூ கத்தில் சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்துள்ளன. சிபிஐ(எம்) சாதிப் பாகுபாட்டை வெறும் சாதிப் பிரச்சனையாகப் பார்க்கவில்லை; அது ஒரு ஜனநாயக மற்றும் மனித உரிமைப் பிரச்சனை. வர்க்கப் போராட்டம் என்பது வர்க்கச் சுரண்ட லுக்கு எதிரானது மட்டுமல்ல, அது சமூக ஒடுக்குமுறைக்கும் எதிரா னது” எனத் தெளிவுபடுத்தினார். பெண் களுக்கு எதிரான குற்றவாளிகளைப் பாதுகாக்கும் புதிய பாணியை பாஜக கடைப்பிடிப்பதாகவும், சிறு பான்மையினர் மீதான வெறுப்பு அரசியல் உச்சத்தை எட்டியுள்ளதாக வும் அவர் குற்றம் சாட்டினார். கேரளத்தின் மாற்றுப் பாதை: நம்பிக்கையின் ஒளி ஒன்றிய அரசின் நிதி நெருக்கடி களுக்கு மத்தியிலும், கம்யூனிஸ்டு கள் தலைமையிலான கேரள இடது சாரி அரசு எப்படி ஒரு மாற்றைக் கட்ட மைக்க முடியும் என்பதை அவர் விளக்கினார். “கேரள அரசு அறி வியல் அடிப்படையில் நுண்திட்ட மிடல் மூலம் மாநிலத்தில் தீவிர வறு மையை ஒழித்துள்ளது. வேலை உறுதிச் சட்டத்தை அமல்படுத்து வதில் முதலிடம், நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம், தொழிலாளர் விரோ தச் சட்டங்களை நிராகரித்தல் என இடதுசாரிகளால் மட்டுமே மக்க ளுக்கு உண்மையான பாதுகாப்பை தர முடியும்” என்றார். இளைஞர்களுக்கு அறைகூவல் இறுதியாக, “மரம் அசையாமல் இருக்க விரும்பினாலும் காற்று விடு வதில்லை” எனும் சீனப் பழ மொழியை மேற்கோள் காட்டி, அமை தியாக இருக்க விரும்பும் சாமானி யர்களையும் இந்த நெருக்கடிகள் போர்க்களத்திற்கு இழுப்பதாகக் கூறினார். “நமது ஆயுதங்கள் கரு விகள் அல்ல; நமது கருத்துகளே ஆயுதங்கள். சுரண்டலுக்கு எதிரான கருத்தை ஏந்துங்கள். கண்ணிய மான எதிர்காலத்திற்காக இளைஞர் கள் இடதுசாரிகளுடன் கைகோர்க்க வேண்டும். இடதுபுறம் செல்வது என் பது வெறும் போக்குவரத்து விதி மட்டுமல்ல; அது தேசத்தின் கண்ணிய மான எதிர்காலத்திற்கான விதியு மாகும்” எனத் தனது உரையை நிறைவு செய்தார். பசவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் மாநில செயலாளர் பிரகாஷ் மற்றும் கட்சியின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
