பாஜக ஆளும் ராஜஸ்தானில் பெண் மேலாளருக்கு கும்பல் பாலியல் வன்கொடுமை
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரபல தனியார் ஐடி நிறுவனம் உள் ளது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜிதேஷ் சிசோடியா தனது பிறந்த நாளை முன்னிட்டு புதன் கிழமை விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இதில் அந்த நிறுவனத்தின் பெண் மேலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின்பு பெண் மேலாளருக்கு காரில் லிப்ட் தருவ தாக அந்த நிறுவனத்தின் பெண் உயரதி காரி கூற, காரில் பெண் மேலாளர் ஏறி னார். காரில் தலைமை செயல் அதி காரி ஜிதேஷ் சிசோடியா, பெண் உயரதி காரியின் கணவர் சரோஹி ஆகியோரும் இருந்தனர். அப்போது மயக்க நிலையில் இருந்த பெண் மேலாளரை ஜிதேஷ் சிசோடியா, சரோஹி ஆகியோர் பாலியல் வன் கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவரை வீட்டில் இறங்கிவிட்டுள்ளனர். அடுத்தநாள் மயக்கம் தெளிந்த பின், தான் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டதை உணர்ந்த பெண் மேலாளர் காவல்துறையில் புகார் அளித்தார்.இது தொடர்பான புகாரில்,”என்னை காரில் அழைத்து சென்றபோது வழியில் ஒரு பொருளை வாங்கி எனக்கு கொடுத்த னர். அதை உட்கொண்ட பிறகு நான் மயக்கமடைந்தேன். பின்னர் என்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்” என அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ஜிதேஷ் சிசோடியா, சரோஹி மற்றும் உடந்தையாக இருந்த பெண் உயரதிகாரி ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
