tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

நாம் தமிழர் அடாவடி - திவிக பதிலடி

சேலம், டிச.26- ஏற்காடு மலைப்பாதையிலுள்ள 8-வது கொண்டை ஊசி வளைவிற்குப் பெரியார் பெயர் இருந்ததை, நாம் தமி ழர் கட்சியினர் மாற்றிய நிலையில், திவிக-வினர் பெரியார் வளைவு என பெயர் சூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 20 கொண்டை ஊசி வளைவுகளுக்கு நெடுஞ்சாலைத் துறை சார்பில் முக்கியத் தலைவர்கள் மற்றும் மன்னர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள் ளன. இதில் 8-வது வளைவிற்கு ‘தந்தை பெரியார் வளைவு’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இது ஏற்கனவே ‘தகடூர் அதியமான் வளைவு’ என இருந்ததாகக் கூறி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், நாம் தமிழர் கட்சியினர் பெரி யார் பெயரின் மீது கருப்பு பெயிண்ட் அடித்து, அதியமான் பெயர் கொண்ட போஸ்டரை ஒட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திராவிடர் விடுதலைக் கழ கத்தினர் (திவிக) வெள்ளியன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். பெரியார் பெயரை மறைத்தவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கமிட்டு, மீண்டும் அவ்விடத் தில் ‘தந்தை பெரியார் வளைவு’ என்ற பதாகையை ஒட்டித் தங் கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இச்சம்பவத்தால் ஏற்காடு மலைப்பாதையில் பதற்றமான சூழல் நிலவியது.

103 சவரன் நகைகள் திருட்டு

கோவை, டிச.26- குனியமுத்தூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் இருந்த 103 சவரன் தங்கநகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் பகுதியை சேர்ந்த வர் ராஜன் இவரது மனைவி ஜெபா மார்ட்டின் (52). இவர்  அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார். இந்நிலையில் பள்ளியின் அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ராஜன், ஜெபா மார்ட்டின் குடும்பத்தோடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் வெள்ளியன்று காலை  வழக்கம் போல வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, பீரோவை  திறந்து பார்த்த போது உள்ளே இருந்த சுமார் 103 சவரன் தங்க  நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் இல்லாதது கண்டு அதிர்ச்சிய டைந்தார். இதுகுறித்து ஜெபா மார்ட்டின் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோவை மாநகர தெற்கு துணை ஆணையர்  கார்த்திகேயன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சிசிடிவி காட்சிகளை சேகரித்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். சேலம் இதேபோன்று, சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் அருகே உள்ள சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் வீட்டில் மர்ம நபர்கள் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்து பட்ட பகலில் 60 பவுன் தங்க நகை  மற்றும் ரூ.65 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர். கொண்டலாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

ஒரே நாளில் தொப்பூர் கணவாயில் 11 வாகனங்கள் விபத்து

தருமபுரி, டிச.26- தொப்பூர் கணவாயில், 3 இடங்களில், கன்டெய்னர் லாரி, கார்கள் உட்பட 11 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்தால் 5 மணி நேரத் திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து இரும்பு குழாய் ஏற்றிய லாரி ஒன்று, நாகர்கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தது. தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் அருகே வியாழனன்று நள்ளிரவு ஒரு மணியளவில் வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு,  தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி  வைத்தனர். அதேபோல், தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை யில், கன்டெய்னர் லாரி ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தொப்பூர் கணவாய் பகுதி யில் வியாழனன்று அதிகாலை 4 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில், தாறுமாறாக ஓடி, சென்டர் மீடி யனில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும், அடுத்தடுத்து ஒரு லாரி, கார், டெம்போ ஆகிய வாகனங்களும் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் கன்டெய்னர் லாரியில், வந்த இரண்டு ஓட்டுநர்களும் இடிபாடுகளில் சிக்கிக் கொண் டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தொப்பூர் காவல் துறை யினர், படுகாயமடைந்த 2 ஓட்டுநர்களையும் மீட்டு சிகிச்சைக் காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின் விபத்துக்குள்ளான வாகனங் களை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். கிறிஸ்மஸ் விழாவையொட்டி, தொடர்ந்து 4 நாட்கள் விடு முறை என்பதால், ஏராளமானோர் கார்களில் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். இதனால் தொப்பூர் தேசிய நெடுஞ்சா லையில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. சேலத்தை நோக்கி கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் போது, வெள்ளக்கல் பகுதியில், சென்டர் மீடியனின் அருகே  கார் வேகத்தை குறைத்ததால், பின்னால் வந்த அடுத்தடுத்து 6 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் கார்கள் மட்டும் சேதமடைந்த நிலையில், எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இப்படியாக, வியாழனன்று ஒரே நாளில் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று விபத்துகள் நடை பெற்ற நிலையில் 11 வாகனங்கள் விபத்தில் சிக்கியது. இதன் காரணமாக தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை யில் 5 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற் பட்டது.

கடும் பனியால் கருகும் கறிவேப்பிலை விளைச்சல் பாதிப்பால் கிலோ ரூ.90க்கு விற்பனை

மேட்டுப்பாளையம், டிச.26- கடும் பனியால் கருகும் கறிவேப்பிலை, விளைச்சல் பாதிப்பால் கிலோ ரூ.90க்கு விற்பனையாகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாழைக்கு அடுத்தபடியாக கறிவேப்பிலை பிரதானப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் தரமான கறி வேப்பிலை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநி லங்களான கேரளம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்கும் தினசரி டன் கணக்கில் அனுப்பி வைக்கப்படுகிறது. நடப்பாண்டு பருவமழை ஓரளவு  கைகொடுத்த போதிலும், கடந்த ஒரு மாத காலமாக மேட்டுப்பாளை யம் மற்றும் நீலகிரி மலையடிவாரப் பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவு கறிவேப்பிலை விவசாயத்தை புரட்டிப் போட்டுள்ளது.  மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை நீடிக்கும் கடும் பனியால், கறிவேப்பிலை செடிகளின் வளர்ச்சி முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. குறிப்பாக, பனித் தாக்கத்தினால் இலைகள் கருகி சுருண்டு வரு வதுடன், பல்வேறு பூச்சித் தாக்குதல்களுக்கும் உள்ளாகி வருகின் றன. இதனால் மகசூல் முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிந்துள்ள தாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விளைச்சல் பாதிப்பால் சந்தைக்கு வரும் கறிவேப்பிலையின் வரத்து வெகுவாகக் குறைந்துள் ளது. கடந்த மாதம் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனை யான கறிவேப்பிலை, தற்போது தட்டுப்பாடு காரணமாக 90 ரூபாய் வரை  உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தங்களுக்கு எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “விலை அதிகரித்திருந்தாலும், போதிய மகசூல் இல்லை. முன்னர் கிடைத்த விளைச்சலில் தற்போது 20 சதவீதம் கூடக் கிடைப்ப தில்லை. செடிகள் கருகி வருவதால் பராமரிப்புச் செலவு அதிகரித்துள் ளதே தவிர, லாபம் ஏதுமில்லை” எனத் தெரிவித்தனர்.

பறவை காய்ச்சல்: சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு

கோவை, டிச.26- கேரளாவில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில், கேரளா வில் இருந்து கோவை வரும் வாக னங்களில் கிருமி நாசினி தெளிக்கப் பட்டு சோதனைக்கு பின்னரே  அனும திக்கப்படுகிறது. கேரளம் மாநிலம் ஆலப்புழா, கோட் டையம் ஆகிய மாவட்டங்களின், சில பகுதிகளில் கோழி மற்றும் வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தது. அதன் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப் பிய போது, இறந்த பறவைகளுக்கு எச்1 என்1 வைரஸ் என்ற பறவை காய்ச் சல் தொற்று இருந்தது கண்டறியப்பட் டது. இதையடுத்து ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பல் வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு - கேரளம் எல்லையில் கண்காணிப்பை தீவிர படுத்த தமிழ்நாடு அரசு பொது சுகா தாரத்துறைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள் ளிட்ட கேரளம் எல்லையோர மாவட்டங் களில் கால்நடை மற்றும் பொது சுகா தாரத்துறை அதிகாரிகள் கண்கா ணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்ஒருபகுதியாக கோவை - கேரளம் எல்லையான வாளையாறு, வேலந்தா வளம் உள்ளிட்ட ஆறு எல்லைகள் வழி யாக,  கேரளாவில் இருந்து கோவை வரும் வாகனங்கள் முழுமையாக தணிக்கை செய்யப்படுகிறது. வாகனங் களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படு கிறது.  மேலும், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் இருந்து வரும் பொது மக்களிடமும் காய்ச்சல் உள்ளதா என தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சுகாதா ரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற் கொள்கின்றனர். தமிழகத்திலிருந்து கோழி மற்றும் இறைச்சிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீண்டும் கோவைக்கு வரும்போது எந்த கழிவு களையும் ஏற்றி வரக்கூடாது என அறிவு றுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கழிவு களுடன் வரும் வாகனங்களை சுகாதா ரத்துறை அதிகாரிகள் மீண்டும் கேர ளாவிற்கு திருப்பி அனுப்புகின்றனர். அதேபோல் மறு உத்தரவு வரும் வரை கேரளாவில் இருந்து கோவை வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப் பட்டு அதன் பின்னரே உள்ளே அனு மதிக்கப்படும் என சுகாதாரத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.