tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

பறவை காய்ச்சல் பரவவில்லை! தமிழக சுகாதாரத் துறை விளக்கம்

சென்னை, டிச.26- கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் வேக மாகப் பரவி வரும் நிலையில், முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் கோழி மற்றும் மாட்டிறைச்சி வண்டிகளில் கிருமிநாசினி அடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்றும், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை அறி வுறுத்தியுள்ளது. பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர் காய்ச்சல், சுவாசக் கோளாறு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறி குறிகள் உடையவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வும், ரத்தப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சட்டமன்றம் ஜன.20-இல் கூடுகிறது

சென்னை, டிச.26 - 2026 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 20 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறி வித்துள்ளார்.  ஆளுநர் ஒப்புதலுடன் ஜனவரி 20 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடும். அன்றைய தினமே தமிழக முதலமைச்சர், அமைச்சர்களால் தயாரிக்கப்பட்ட உரையை ஆளுநர் ஆர்.என். ரவி  வாசிப்பார். அன்று காலை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடை பெறும் என்றும், ஏற்கனவே பின்பற்றப்படும் அவை மரபுபடி தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து ஆளு நர் உரை இடம்பெறும் என்றும் பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். செய்தி யாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பேரவை தலைவர், “தமிழ்நாடு அரசு தயாரிக்கும் உரையை ஆளுநர் முழுமையாக வாசிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.

சுனாமி  21 ஆம் ஆண்டு நினைவு தினம்

சென்னை, டிச.26 - 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரழிவின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலியுடன் கடைப்பிடிக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை சுனாமி சூறையாடிச் சென்றது. தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். குறிப்பாக நாகப்பட்டினத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், கன்னி யாகுமரியில் 800க்கும் அதிகமானோரும் உயிரி ழந்தனர். அந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு, சென்னை காசிமேட்டில் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் சுனாமி நினைவு தூண்களில் மலர்வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் உறவினர்கள், மீனவர்கள், பொதுமக்கள், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பல இடங்களில் மவுன ஊர்வலமும், அஞ்சலியும் நடைபெற்றது.   மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.