“பயத்தின் நிழலில் இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்” கிறிஸ்தவர்கள் மீதான இந்துத்துவா குண்டர்களின் தாக்குதலுக்கு சர்வதேச ஊடகங்கள் கடும் கண்டனம்
புதுதில்லி உலகம் முழுவதும் டிச., 25 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாப்பட்டது. தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்க ளைத் தவிர, மற்ற மாநிலங்களில் டிச., 20 முதல் கிறிஸ்துமஸ் கொண் டாட்டங்களின் போது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த இந்துத்து வா குண்டர்கள் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவங்கள் இந்திய ஊடகங்களில் மட்டுமல்லாமல், சர்வதேச ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. கண்டனங்களும் கிளம்பியுள்ளன. தி இன்டிபென்டன்ட் இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கிறிஸ்த வர்கள் மீதான தாக்குதல் தொ டர்பாக பிரிட்டிஷ் செய்தித்தாளான “தி இன்டிபென்டன்ட்” கூறுகை யில், “இந்தியாவில் இந்து வலது சாரி குழுக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்தனர். இதுகுறித்து கிறிஸ்தவ மற்றும் மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித் துள்ளன. அதே போல உலகம் முழுவதும் கடுமையாகக் கண் டிக்கப்பட்டுள்ளன” என அதில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரபு டைம்ஸ் குவைத் ‘அரபு டைம்ஸ் குவைத்’ பத்தி ரிகை கிறிஸ்துமஸ் தினத்தன்று தில்லியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு காணொளியை வெளியிட்டு,”சிவப்பு தொப்பிக ளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சில ஆண்கள், பெண்களைத் தங்கள் தொப்பிகளைக் கழற்றி விட்டு வீட்டிற்குச் செல்லுமாறு மிரட்டுகின்றனர். கிறிஸ்துமஸ் என்பது இந்தியாவின் கிறிஸ்தவ சமூகத்தால் மிகுந்த உற்சாகத்து டன் கொண்டாடப்படும் ஒரு பண் டிகை. ஆனால் இந்த முறை கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறிஸ்தவ சிறுபான்மையினரை இலக்காகக் கொண்ட பல தாக்கு தல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங் கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கிறிஸ்தவ சமூகத்திற்கு ஏற் பட்டுள்ள அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, கிறிஸ்தவ சமூ கத்திற்கு இந்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது. தி டெலிகிராப் பிரிட்டிஷ் செய்தித்தாளான தி டெலிகிராப்,”இந்தியாவில் பல இடங்களில் தேவாலயங்களில் நடந்த கொண்டாட்டங்களை இந்து அமைப்புகள் தடுக்க முயன்றனர்” என செய்தி வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. தனது அதிகா ரப்பூர்வ சமூகவலைத்தளப் பக்கங்களில் மத்தியப்பிரதேசம், தில்லி, கேரள மாநிலங்களில் நிகழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு எதி ரான தாக்குதல் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளி யிட்டுள்ளது. டிஆர்டி வேர்ல்ட் “பயத்தின் நிழலில் இந்தி யாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட் டங்கள்” என்ற தலைப்பில் துருக்கி யின் ‘டிஆர்டி வேர்ல்ட்’ ஊடகம், “இந்தியாவில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளா உட்பட பல இடங்க ளில் கிறிஸ்துமஸ் கொண்டா டிய கிறிஸ்தவ சமூகத்தின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் இந்து அமைப்புகள் ஈடு பட்டன” எனக் குற்றச்சாட்டுக ளுடன் கண்டனம் தெரிவித்துள் ளது. மேலும் பல சர்வதேச மனித உரிமை சார்ந்த அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எடுபடாத மோடியின் ஷூட்டிங் டிச., 20 முதல் தனது கட்சி
(பாஜக) மற்றும் தொடர்புடைய இந்துத்துவா அமைப்புகள் நாட்டின் பெரும்பாலான இடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை சீர்குலைக்கும் நோக்கத்தில், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால் இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்க வாய் திறக்கவில்லை. இந்துத்துவா கும்பலின் அடாவடியை மூடி மறைக்கவும், கிறிஸ்தவர்களின் எதிர்ப்பை சரி கட்டும் வகையில் டிச., 25 அன்று தில்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்திற்கு சென்று பிரதமர் மோடி சிறப்பு ஷூட்டிங்கில் ஈடுபட்டார். 5 கேமராக்களுடன் படப்பிடிப்புக்கு நிகரான அளவில் பிரதமர் மோடியின் தேவாலய ஷூட்டிங் வீடியோ, புகைப்படங்கள் வெளியானது. ஆனால் இந்த வீடியோ, புகைப்படங்களை பாஜக ஆதரவு பெற்ற “கோடி மீடியா” ஊடகங்கள் மட்டுமே தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. மற்றபடி சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங் பார்மட்டில் கூட மோடியின் ஷூட்டிங் காலடி வைக்க வில்லை. கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் மட்டுமே வைரலாகின. குறிப்பாக சர்வதேச ஊடகங்கள் பிரதமர் மோடியின் தேவாலய ஷூட்டிங்கை கண்டுகொள்ளவில்லை. மதவாதத்தின் உச்சம் தில்லி கதீட்ரல் தேவாலயத்திற்கு சென்றவுடன் பிரதமர் மோடியி டம் பைபிள் மற்றும் பாடல் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பைபிளை வாங்காமல் பாடல் புத்தகத்தை மட்டுமே வாங்கினார். பாடலின் பக்கமும் தேவாலய பாதிரியர்கள் எடுத்துக் கொடுத்தனர். ஆனால் மோடி ஒரு வரி கூட பாடவில்லை. இசைக்கு தாளம் கொட்டும் வேலையை மட்டும் வழக்கம் போல செய்தார். இது மதவாதத்தின் உச்சம் என சமூகவலைத்தளங்களில் கண்டனம் குவிந்து வருகிறது.
