ஒரு நீச்சலப் போடலாமா?
ஸ் சப்பா... வேலை முடிச ஒடனே வீட்டப்பக்கம் போயி ஒரு ரெஸ்ட போடணும்.... இப்படி தான் பலரும் வேலைய முடிச்சி கிளம்பும்போது யோசிப்போம்... அதுலயும் வீட்டுக்கு போகும் போது பஸ்ல சீட் கிடைக்கணுமேன்னு பலருக்கும் ஒரு ஏக்கம் இருக்கும். சீட் இல்லாட்டி திண்டாட்டம் தான். நாம் இப்படி யோசிக்குற அதே நேரத்துல தான் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகர்ல வேலைக்கு போகும் போதும் சரி, வேலையை முடிச்ச பிற கும் சரி சட்டைய கழட்டி போட்டுட்டு ஆத்துல குதிச்சு குளுகுளு தண்ணீல தான் பலபேரு மிதந்து போறாற் கன்னா பாத்துக்கங்களேன். பெர்ன் நகரோட மையப்பகுதியில ‘ஆரே’ (Aare) ன்னு பெயர் கொண்ட ஒரு ஆறு ஓடுது. வெயில் காலத்துல இந்த ஆறு அந்த நகரத்தோட ஒரு நல்ல சுற்றுலாத் தலமாக இருக்கு. அது மட்டு மில்ல உள்ளூர் மக்களின் முக்கியப் போக்குவரத்துப் பாதையாகவும் இருக்கு. அலுவலகம் செல்பவர்கள், அல்லது திரும்புபவர்கள் கார் அல் லது ரயிலில் செல்வதற்குப் பதிலா, அந்த ஆற்று நீரோட்டத்தில் மிதந்து தான் செல்கிறார்கள். அந்த ஆற்றில் நீந்தியோ மிதந்தோ செல்கிறார்கள் என கேட்பதற்கு எளி தாகத் தோன்றினாலும், அதற்குச் சில வழிமுறைகள் உள்ளன. அந்த ஆற்றில் நீரோட்டம் அதிக மாக இருக்கும் என்பதால், நன்றாக நீந்தத் தெரிந்தவர்கள் மட்டுமே இதில் இறங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அலுவலம் செல்லும் மக்கள் பெரும் பாலும் அலுவலக உடைகள், லேப்டாப், போன் போன்றவற்றை வைக்க விக்கெல்பிஷ்’ (Wickelfisch) என்ற மீன் வடிவிலான நீர்புகாத பை யைப் பயன்படுத்துகிறார்கள். ஆற்றில் இறங்குவதற்கு முன்ன தாக, உடலை அந்தத் தண்ணீரின் குளிர்ச்சிக்கு ஏற்ப பழக்கப்படுத்தச் சில நிமிடங்கள் தண்ணீரில் அமர்ந்திருக்கி றார்கள். பிறகு நீரோட்டத்தோடு மிதந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்கிறார்கள். ஆற்றின் கரையில் ஆங்காங்கே ஏறி இறங்கு வதற்குப் ஏற்ற வகையில் வசதியான படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி மிதந்தோ நீந்தியோ செல் லும் போது வாகனத்தில் சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்குவதை விட விரைவாகச் செல்ல முடிகிறது. உதாரணமாக, எவலின் என்ற ஒரு பெண் அவரது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வெறும் 15 நிமிடங்களில் அந்த ஆற்றில் மிதந்தே வந்துவிடு வதாகக் கூறுகிறார். நாள் முழுவதும் அலுவலக வேலையில் இருந்த களைப்பு நீங்க, மாலையில் இதமான ஆற்று நீரில் இப்படி மிதந்து செல்வது சிறந்த மன அழுத்த நிவாரணியாக இருப்பதாக அம்மக்கள் கருதுகிறார்கள். பொதுவாகச் சுவிட்சர்லாந்து மக் கள் சற்றுத் தனிமையாக இருக்க விரும்புவார்கள். ஆனால் கோடை காலத்தில் இந்த ஆற்றில் அனை வரும் ஒன்றாக நீந்தும்போது, மக்களி டையே ஒரு நல்ல நட்புணர்வு உரு வாகிறது எனவும் கூறுகிறார்கள். நீச்சல் என்பது அம்மக்களின் ஒரு வாழ்க்கை முறையில் ஒன்றாக உள் ளது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றுலாப் பயணிகளும் இவ்வாறு மிதந்து போக பெர்ன் நகர நிர்வாகம் அனுமதி தருகிறது. அந்த பய ணத்தை மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றின் வேகத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும், உள்ளூர் நிர்வாகம் வழங்கும் பாது காப்பு விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் களுக்கு உள்ளூர் நிர்வாகம் வழி காட்டி வருகிறது. அவங்க ஊருல ஆறு சுத்தமா பரா மரிக்கப்படுது. குதிச்சு சந்தோசமா நீந்துறங்கன்னு, நீங்க யோசிக்கிறீங் கன்னு நினைக்குறேன்?
