tamilnadu

img

ஜனவரி 10-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு!

பொங்கல் தொகுப்பு ஜனவரி 10ஆம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி, வெல்லம், பருப்பு, எண்ணெய், கரும்பு, நெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், பொங்கல் தொகுப்பு ஜனவரி 10ஆம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார்.
மேலும் பொங்கல் தொகுப்பு தயாராக உள்ளது என்றும் முதலமைச்சர் அறிவித்த உடன் எப்போது வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.