tamilnadu

img

திருப்பரங்குன்றத்தின் மத நல்லிணக்கப் பாரம்பரியத்தைப் பாதுகாப்போம்! மாதர் சங்கம் பிரச்சார நடைபயணம்; போலீஸ் அனுமதி மறுப்பு - கைது!

திருப்பரங்குன்றத்தின் மத நல்லிணக்கப் பாரம்பரியத்தைப் பாதுகாப்போம்! மாதர் சங்கம் பிரச்சார நடைபயணம்; போலீஸ் அனுமதி மறுப்பு - கைது!

மதுரை, டிச. 27 - “மத நல்லிணக்கம் காப் போம்; மக்கள் ஒற்றுமை பாது காப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், மத நல்லிணக்கப் பிரச்சார நடை பயணம் மேற்கொண்டனர். ஹார்விபட்டி கலையரங்கம் முதல் திருநகர் 2-ஆவது பேருந்து நிறுத்தம் வரை பிரச்சார நடை பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என். விஜயா  தலைமையில், சனிக்கிழமை யன்று மாலை 4 மணிக்கு மாதர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற் பட்டோர் ஹார்விபட்டியில் கூடினர். அவர்கள், நடைபயணத்தை துவங்கிய நிலையில், அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறி  காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு மாதர்  சங்கத் தலைவர்கள் தங்களின்  அதிருப்ருதியை வெளிப்படுத்தினர். கார்த்திகை தீபம் விவகாரத் தில், மதவெறியர்களின் அராஜ கத்தை முறியடித்து, அமைதியை நிலைநாட்டிய காவல்துறையின் நடவடிக்கையை மாதர் சங்கம் பாராட்டுகிறது; அதேநேரம் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நடைப்பயணத்திற்கு அனுமதி மறுப்பது; அதிலும் திடீரென அனு மதி மறுப்பது, சரியல்ல என்றனர். அத்துடன், திட்டமிட்டபடி நடைபயணத்தைத் துவங்கினர். மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் அ. ராதிகா,  மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.  பாலபாரதி, எஸ்.கே. பொன்னுத் தாய், புறநகர் மாவட்டச் செயலா ளர் எஸ். சரஸ்வதி, மாவட்டப்  பொருளாளர் ஏ. சுமதி, துணைத்  தலைவர் கே.பிரேமலதா, துணைச் செயலாளர் எம். ஜான்சி, மாவட்  டக்குழு உறுப்பினர் கே. பிருந்தா  உள்ளிட்ட 200-க்கும் மேற்பட் டோர் மதநல்லிணக்க முழக்கங்  களை எழுப்பியபடி கிளம்பினர்.  ஆனால், அவர்கள் அனைவரை யும் நடைபயணத்தைத் தொடராத படி தடுத்து போலீசார் கைது செய்தனர்.