கட்டணமில்லாமல் இருப்பிடச் சான்றிதழ் வழங்கும் அரசின் உத்தரவுக்கு வரவேற்பு!
சென்னை, டிச.27- கட்டணமில்லாமல் பிறப்பிடச் சான்றிதழ் வழங்க தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வர வேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ், மாநிலச் செய லாளர் எஸ். கார்த்திக் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் நவம்பர் 4 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின. முதற் கட்டமாக கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பிப்பதற்கான காலக் கெடு, டிசம்பர் 4 என்று நிர்ணயிக்கப் பட்டிருந்தது. பின்னர், வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கை யைத் தொடர்ந்து இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இறுதியாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டுப் படிவத்தைச் சமர்ப் பிக்கும் பணிகள் தமிழ்நாட்டில் டிசம்பர் 14-ஆம் தேதியுடன் நிறைவ டைந்த நிலையில், வரைவு வாக்கா ளர் பட்டியல் டிசம்பர் 19 அன்று வெளி யிடப்பட்டது. 1 கோடிப் பேர் நீக்கப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது இதில், தமிழ்நாட்டில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 75,035- ஆக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள் ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு அதிக பட்சம் 1,200 வாக்காளர்கள் என்ற கணக்கில் மறுசீரமைப்பு செய்யப் பட்டு இருப்பதாக தேர்தல் ஆணை யம் தெரிவித்தது. எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் மொத்த வாக்கா ளர்கள் எண்ணிக்கை: 6,41,14,587, எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகான வாக்காளர் எண்ணிக்கை: 5,43,76, 755, தமிழ்நாடு முழுவதும் மொத்த மாக நீக்கப்பட்ட பெயர்களின் எண் ணிக்கை: 97,37,832, ஏறக்குறைய தமிழ்நாட்டில் ஒரு கோடி பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் சந்தே கங்களை எழுப்பியுள்ளது. வாக்காளர் பட்டியலில் நீக்கப் பட்டதற்கான காரணங்கள் சரி யில்லை என்று ஆட்சேபனைகள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18 வரை தெரிவிக்கலாம். அதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இடம் மாறிய வர்கள் படிவம் 8, புதிதாகப் பெயர் சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகிய படி வங்களைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நவம்பரிலேயே கோரிக்கை விடுத்த வாலிபர் சங்கம் முன்னதாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கடந்த நவம்பர் 18 அன்று வெளியிட்ட அறிக்கையில், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை, இளம் வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக மட் டும் அணுக முடியாது; 60 வயதிற்கும் மேற்பட்ட தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரியமான வாக்காளர்களை நீக்குவதற்கான திட்டமிட்ட சதி. 50 வயதிற்கு மேற்பட்ட 90 சதவிகித மக்களுக்கு தேர்தல் ஆணையம் கேட்கிற ஆவணங்கள் எதுவும் இருக்காது என்பதே நிலை. எனவே, பெரும்பகுதி வயதான வாக்காளர் களின் வாக்குகளை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஏதாவது ஒரு ஆவணத்தை போர்க்கால அடிப் படையில் வழங்க முடியுமா என்பதை ஆராய வேண்டும். அதற்கு சிறப்புக் குழு ஒன்றினை அமைக்க வேண் டும்” என்று தெரிவித்திருந்தது. தமிழக அரசின் உத்தரவை வரவேற்கிறோம் இந்நிலையில், வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்க்க ஏதுவாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப் பட்டுள்ள 13 ஆவணங்களில் ஒன் றான இருப்பிடச் சான்றிதழ் கோரு வோருக்கு 26.12.2025 முதல் 25.1. 2026 வரை கட்டணமில்லாமல் இருப் பிட சான்றிதழ் வழங்க துணை வட்டாட்சியர்களுக்கு அதிகாரம ளித்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்நடவடிக் கையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வரவேற்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பி டப்பட்டு உள்ளது.