காந்தி தேசம்
காந்தியை கொன்று தான் கணக்கைத் துவக்கினார்கள் பெயர்களைப் புதைப்பதற்கு அவர்கள் ஏன் பயம் கொள்ளப் போகிறார்கள்? பணத்தாளில் இருக்கும் பிதாவை நீக்குவது தானே நீண்ட செயல்திட்டத்தில் ஒரு பகுதி அடுத்த பண மதிப்பு இழப்பு திட்டத்தில் காந்தியும் காணாமல் போவார்! இந்தியா அகண்ட பாரதமாகும் காந்தியின் இடத்திற்கு கோட்சே வருவார் நஞ்சு தோய்ந்த பேரதிகாரத்தின் முன் நீங்கள் தேச விரோதிகளாவீர்கள்! இட்லரோடு இணை வைத்து பேசக்கூடிய மோடி மஸ்தான்கள் இந்தியாவில் உருவாகி நீண்ட நாட்களாகிறது காந்தியை சுட்டு வீழ்த்திய கரங்களுக்கு தெரியும் அவரைத் தடயமில்லாமல் எப்படி அழிப்பதென்று. ரொம்பவும் பதட்டப்படாதீர்கள், அவர்கள் உங்கள் மூளைக்குள் புகுந்து உங்களை அழிப்பதறியாது யாருக்காகவோ அழுது கொண்டிருக்கிறீர்கள். இட்லரின் மாபாதகச் செயலுக்கு இட்லர் மட்டும் காரணமில்லை, அவன் தேசத்தையே இட்லராய் மாற்றியிருந்தான். இவர்கள் நம்மையும் மாற்றத் துவங்கி நாளாகிறது நாமும் மெல்ல மாறிக் கொண்டிருக்கிறோம் ஜோம்பிகளைப் போல.
