tamilnadu

img

உறங்கியது போதும், எழு..!

உறங்கியது போதும், எழு..!

காதில் விழுகிறதா காதில் விழுகிறதா! வீடு போகிறது தண்ணீர் மாசாகிறது நிலம் போகிறது உயிர்கள் போகின்றன வாழ்க்கை தொலைகிறது உனக்குத் தூக்கம் முக்கியமா உறங்கியது போதும், எழு.. ராஜஸ்தான் மாநிலம் அனுமன்கர் பகுதியில் உள்ள டிப்பி கிராம மக்க ளைப் பெரும் அளவில் பதற்றத்திற்கு ஆளாக்கியுள்ள எத்தனால் ஆலைக்கு எதி ரான போராட்டத்தில்தான் இந்த முழக்கம்  கேட்டுள்ளது. ஜூலை 2025 முதல் போராட்டக்களத்தில விவசாயிகள் இருக்கிறார்கள். ஜூலை 2025 போராட்டம்  தீவிரமடைந்தது. இந்த ஆலை 65 ஏக்க ரில் அமைவதோடு ஏராளமான அளவில் தண்ணீரைக் காலி செய்யப் போகிறது. அதோடு, இந்த ஆலைக்கழிவு அந்தப்பகு தியில் உள்ள விவசாய நிலங்களைப் பாழாக்கும். ராஜஸ்தான் என்றால் பாலை பாலை என்றால் ராஜஸ்தான் உன் கற்பிதம்!. இருக்கும் சோலைகளையும்  பாலையாக்கும் இழிதொழிலில் நீ. உரக்கச் சொல்வோம்! பாலைகள் சோலையாகட்டும்! மக்கள் வாழ்வில் ஒளியேறட்டும்!! இன்னும் உயர்த்திப்பிடி பந்தத்தை..!! கண்டு கொள்ளாமலேயே நகர்ந்து கொண் டிருக்கும் சார் ஆட்சியரின் வீட்டை  இரவில் முற்றுகையிட்ட விவசாயிகள் தான் இந்த முழக்கங்களை எழுப்பினர். “எங்கள் தூக்கத்தைக் கலைத்து விட்டு நீ உறங்குவதா.?” என்ற முழக்கம், டிப்பி  மட்டுமல்ல, ஒட்டுமொத்த ராஜஸ்தா னுக்கே கேட்டிருக்கிறது. தீப்பந்தங்களை ஏந்தி நூற்றுக்கணக்கான விவசாயிகள் இரவை வெளிச்சமாக்கினர். தோழர்களே! இரவைக் கிழிக்க வாருங்கள் வெளிச்சம் ஏந்தி! திமிரை அகங்காரத்தை எரிக்கட்டும் பந்தங்கள்! விவசாயிகள் போராளிகள் விவசாயிகள் உறுதியானவர்கள் விவசாயிகள் தேசத்துக்கானவர்கள் பரவட்டும் எண்திசையிலும் பந்த ஒளி காட்டும் பாதையை! எழுச்சிமிகு உரைகள் விவசாயிகளை உரமேற்றியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிட்ட மங்கேஜ் சவுத்திரி, மக்களோடு மக்களாக இரவு பகலாக அங்கு இருக்கிறார்.  அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின்  தலைமையில் இந்தப் போராட்டம் ஆட்சி யாளர்களை அசைத்திருக்கிறது. டிசம்பர் 17 அன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி மகாபஞ்சாயத்தை நடத்தி யிருக்கிறார்கள். ஆய்வு செய்யக் குழுவை  அமைக்கிறோம் என்று மாநில அரசு கூறி யுள்ளது. விவசாயிகள் மீதான வழக்குகள்  திரும்பப்பெறப்படும் என்று மாவட்ட நிர்வா கம் உறுதியளித்தது. முழுவெற்றி கிட்டா மல் ஓய மாட்டோம் என்று விவசாயிகள் சூளுரைத்துள்ளனர். அரசுக்கு 20 நாள் கெடு விதித்திருக்கிறார்கள். போராட்டம் தொடர்கிறது; தீவிரம டைந்துள்ளது.