tamilnadu

img

எஸ்.ஐ.ஆர் - தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு முகாம்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம், இன்றும் நாளையும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது என்று தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து  வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட தகுதியுடைய வாக்காளர்கள், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். இதற்காக சிறப்பு முகாம், இன்றும் நாளையும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது என்றும், ஜனவரி 3, 4-ஆம் தேதிகளில் மீண்டும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன என்றும் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்காக 234 தொகுதிகளுக்கும் கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 5-20 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.