இது நடக்கும்.. அது நடக்காது..
2030க்குள் குழந்தைத் திருமணங் களை நிறுத்துவது இந்தியா வின் இலக்காகும். டிசம்பர் 2024 இல் பால் விவாஹ் முக்த் பாரத் அபி யான் (குழந்தைத் திருமணங்களே இல்லாத இந்தியா திட்டம்) தொடங்கப்பட்டது. ஆனால், தற்போது திருமணமாகி 20 முதல் 24 வய துள்ளவர்களை ஆய்வு செய்ததில் 25 விழுக்காட்டினர் 18 வயதிற்கு முன்பே திரு மணமானவர்கள். யுனிசெப்(ஐ.நா. பண்பாடு கல்வி நிதி) நடத்திய 2023ஆம் ஆண்டுக்கான ஆய் வொன்றில் உலகம் முழுவதும் 64 கோடி பெண்களுக்குக் குழந்தைத் திருமணம் நடந்திருக்கிறது. அந்தத் திருமணங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் நடந்தவை தான். உத்தரப்பிரதேசம்தான் குழந்தைத் திரு மணங்களின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது. சமூக, பொருளாதார, கல்வி விழிப்புணர்வு இல்லாத நிலையில் 2030க்குள் இலக்கை எட்டுவதெல்லாம நடக்கவே நடக் காது.. திருமணங்கள் தொடர்ந்து நடக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
லேடி ஜேம்ஸ்பாண்ட்
வரவிருக்கும் வாரணாசி (ராஜமவுலி இயக்கம்) திரைப்படத்தில் நாயகியாக நடிப்பதற்கு 35 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இவரது முதல் படம் “தமிழன்” என்ற தமிழ்த்திரைப்படம்தான். 2002 ஆம் ஆண்டில் நடிக்க ஆரம்பித்தவர், 23 ஆண்டு கள் கழிந்து, இன்றும் இந்தித் திரைப்பட உலகில் கொடி கட்டிப் பறக்கிறார். இதுவரை யில் எந்த நடிகையும் வாங்காத சம்பளத்தை அவர் பெறு கிறார். ஆண் நடிகர்கள் கோலோச்சும் திரையுலகில் நடிகையொருவர் இவ்வளவு காலம், இவ்வளவு சம்பளம் என்பது சாதாரணமானதல்ல என்கிறார்கள் திரைத்துறை யினர். அமெரிக்க டி.வி. தொடர் கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்து டன் பல லட்சக்கணக்கான டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் செய்திருக்கிறார். லேடி ஜேம்ஸ்பாண்ட் பாத்திரம் உரு வானால் அதற்கு பிரியங்கா மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என்று லண்டனில் இருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் நாளிதழ் பாராட்டி யிருக்கிறது.
அமெரிக்கா இல்லாத பொருளாதாரம்..?
பிற நாடுகள் அமெரிக்காவுக்கு சரக்குகளை அனுப்பிவிட்டு, தங்கள் பொருட்களை இறக்குமதி செய்ய மறுக்கின்றன என்று டிரம்ப் குற்றம் சாட்டினாலும், 2024 இல் அமெரிக்காவின் இறக்குமதி, உலக இறக்குமதியில் 13.9 விழுக்காடுதான் இருந்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் இறக்குமதி 35.8 விழுக்காடு, ஆசிய நாடுகளின் இறக்குமதி 31.7 விழுக்காடு என்றிருந்தது. டிரம்ப்பின் தவறான முடிவுகள் தொடர்ந்தால், தங்களுக்குள்ளான வர்த்தகத்தை ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகள் அதிகரித்துக் கொள்ளும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். அமெரிக்காவின் பொருளாதாரத்தையே டிரம்ப் சிதைக்கிறார் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
கால்களே கைகள்!
கடந்த மாதம் நடந்த ஆசிய பாரா விளையாட்டுகளில்(மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டி) வில்வித்தைப் பிரிவில் ஷீத்தல் தேவி தங்கம் வென்றிருக்கிறார். நடப்பாண்டில் சீனாவின் குவான்ங்சுவில் நடந்த போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றவர். மாற்றுத் திறனாளிகளுக்கான வில்வித்தைப் போட்டிகளில் முதன்முறையாக இரண்டு கைகளும் இல்லாத ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். பிறக்கும்போதே ஷீத்தல் தேவிக்கு இரண்டு கைகளும் கிடையாது. கால் விரல்களைக் கொண்டுதான் அம்பு எய்கிறார். 2026 ஆம் ஆண்டில் புதிய இலக்கை வைத்திருக்கிறார். மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளைத் தாண்டி, அனைவருக்குமான போட்டிகளில் பங்கேற்கப் போவதாக முடிவெடுத்துள்ளார்.
