நத்தை ஊர்வது மெதுவாக; வளர்வது வேகமாக!
காமிராவை ஒத்த நமது கண்கள் சிக்க லான உறுப்பு ஆகும். அவை சீர் செய்ய முடியாத சிதைவிற்கு உள்ளாகக் கூடிய வாய்ப்பு உள்ளது. இதை போன்ற கண்கள் புத்தாக்கம் செய்யப்பட்ட உயிர் மாதிரிகள் மிகக் குறைவு. ஆப்பிள் நத்தை கள்(Pomaceacanaliculata) எனப்படும் ஒருவகை நத்தைகள் முற்றிலும் அழிந்த கண்களையும் புதிதாக உண்டாக்குகின்றன. இவற்றின் கண்கள் காமிராவை போன் றவை. நம்மைப் போன்றே கண் வளர்ச்சிக்கு இன்றியமையாத பிஏஎக்ஸ்6 எனும் மரபணு இந்த நத்தைகளுக்கும் தேவைப்படு கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். ஆகவே இந்த உயி ரினத்தை ஆய்வு செய்வது சிக்கலான உணர்வுறுப்புகளின் புத்தாக்கத்தை புரிந்து கொள்வதும் அந்த முறைகளை சோதிப்பதற்கான வழியாகும். கலி போர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த (யுசிடேவிஸ்) உயிரியலாளர் அலிஸ் அக்கார்சி இந்த ஆய்வை மேற்கொண்டுள் ளா. இந்த நத்தைகள் தென் அமெரிக்காவை சேர்ந்தவை. இப்போது உலகம் முழு வதும் பரவியுள்ளது. விரைவாக புத்தாக்கம் செய்பவை. நிறைய இனப்பெருக்கம் செய்கின்றன. சோதனைச் சாலையில் வளர்க்க எளிதானவை. பல நூற்றாண்டு களாக அவற்றின் புத்தாக்கத் திறமை கவ னிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை முதன்முதலாக ஆய்வுக்கு உட்படுத்தியவர் அக்கார்சி ஆவார். விலங்குலகில் பலவகை கண்கள் உள்ளன. ஆனால் காமிராவை ஒத்த கண்கள் அதிக தெளிவான பிம்பங்களை உண்டாக்கு கின்றன. இதில் கார்னியா எனும் பாதுகாப்பு படலம், ஒளியை குவிக்க ஒரு லென்ஸ், ஒளி யை உணரும் செல்கள் கொண்ட விழித்திரை ஆகியவை உள்ளன. நத்தையின் கண்களை எடுத்து நுண்ணோக்கி சோதனை, மரபணு ஆய்வு போன்றவற்றின் மூலம் இந்த ஆய்வாளர்கள் ஆப்பிள் நத்தையின் கண்கள் மனிதக் கண்களை ஒத்தவை என்று காட்டி யுள்ளனர். கண்கள் நீக்கப்பட்ட ஒரு மாதத்தில் ஆப்பிள் நத்தைக்கு மீண்டும் கண் உருவாகி விடுகிறது. முதலில் 24 மணி நேரத்தில் புண்கள் ஆறுகின்றன. இதனால் தொற்று ஏற்படுவதும் திரவம் வீணாவதும் தடுக்கப்படு கிறது. பின் பொதுவான செல்கள் அந்த இடத்திற்கு இடம் பெயர்ந்து பல்கிப் பெருகு கின்றன. ஒன்றரை வாரங்களுக்குள் இவை தனித்தன்மை பெற்று கண்ணின் பாகங்க ளாக வளர்கின்றன. 15 தினங்களுக்குள் பார்வை நரம்பு உட்பட எல்லா பாகங்களும் உருவாகிவிடுகின்றன. ஆனால் பல வாரங்களுக்கு இவை முதிர்ச்சி அடைவது தொடர்கிறது. ‘ஆனாலும் அவை பார்வையை பெற்று விட்டன என்று உறுதியாகக் கூற முடியாது. ஒரு பிம்பத்தை உருவாக்கத் தேவையான உடற்கூறுகள் அனைத்தும் பெற்றுவிட்டன என்று கூற முடியும். பழைய கண்களை போலவே வெளியிலிருந்து வரும் உணர்வுத் தூண்டுதல்களை அவை புராசஸ் செய் கின்றன என்று காட்டுவதற்கு மேலும் சோத னைகள் செய்ய வேண்டும்’ என்கிறார் அக்கார்சி. ஆகஸ்ட் ஆறாம் தேதியிட்ட நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) எனும் இதழில் இந்த ஆய்வு வந்துள்ளது. இந்த ஆய்வில் அக்கார்சியுடன் மேலும் பல ஆய்வாளர்கள் இணைந்திருந்தார். பல அமெரிக்க நிறு வனங்கள் இணைந்து இதற்கான நிதி ஆதா ரத்தை அளித்துள்ளன.
வயதான செல் பேட்டரியை மாற்றலாமா?
நமது செல்களில் மைட்டோ காண்ட்ரியா எனும் உள்ளு றுப்பு ஆற்றலை உண்டுபண்ணும் பேட்டரியாக செயல்படுகிறது. வய தாகும்போது இவை எண்ணிக்கை யில் குறைந்து மெதுவாக வேலை செய்வதுடன் தேய்ந்து போகின்றன. இதனால் இதயம் முதல் மூளை வரை பலவித கோளாறுகள் ஏற் படும். இவற்றை மாற்றுவதன் மூலம் நமது செல்களுக்கு புத்து யிர் ஊட்ட முடியும் என்று ஒரு ஆய்வு காட்டியுள்ளது. அமெரிக்க டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நானோ பூக்கள் எனும் துகள்களை பயன்படுத்தி செல்களை சிதைக்கும் ஆக்சிஜன் மூலக்கூறுகளை நீக்கினர். இத னால் ஸ்டெம் செல்களில் மைட்டோ காண்டிரியாக்கள் அதிகரித்தன. இவைகள் அருகிலுள்ள சிதை வுற்ற செல்களுடன் மைட்டோ காண்டிரியாக்களை பகிர்ந்து கொண்டன. இந்த முறையில் மரபணு மாற்றமோ அல்லது மருந்துகளோ இல்லாமல் வயதாவதையும் அல்லது சிதைவுற்ற செல்களை புத்தாக்கம் செய்வதற்கும் உதவ முடியும் என்கிறார் உயிரியல் பொறி யாளர் அகிலேஷ் கஹர்வார். அழிக்கும் தன்மை கொண்ட கீமோதெரபியினால் பாதிக்கப்பட்ட இதய தசை செல்கள் பிழைப்பது கணிசமாக உயர்ந்தது. இந்த ஆய்வு ஆரம்பக் கட்டத் தில் உள்ளது. விலங்குகளிலும் மனி தர்களிலும் இது வேலை செய்வதை சோதிக்க வேண்டும். இந்த ஆய்வு பிஎன்ஏஎஸ் (PNAS)எனும் இதழில் வந்துள்ளது.
ராங் சைடில மோதினா…
ஒரு பெரும் எரிகல் பூமியை நோக்கி வந்தால் தீர்வு மிக எளிதானது. ஒரு விண்கலத்தை அதன் மீது மோதி அதன் திசையை மாற்றுவது. 2022இல் நாசாவின் டார்ட் திட்டம் அப்படித்தான் செய்து டிமார்பஸ் எனும் எரிகல்லின் திசையை மாற்றியது. ஆனால் இதில் ஒரு ஆபத்து உள்ளதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. அதாவது எரிகல்லின் தவறான இடத்தில் மோதினால் அது சில ஆண்டுகள் கழித்து மீண்டும் பூமியை நோக்கி திரும்பி வரலாம். விண்கலங்கள் எரிகற்கள் மீது தவறாக மோதும்போது, விண்வெளியிலுள்ள புவியீர்ப்புவிசை துளைகள் எனும் பகுதிகளுக்கு அவை தற்செயலாக செலுத்தப்படலாம். அதனால் அதன் சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டு சில காலம் கழித்து பூமியின் மீது மோதும் பாதைக்கு வரலாம். கண்காட்சிகளில் ஒரு பந்தை ஒரு தொட்டிக்குள் எறிந்து அது அங்குள்ள பொருட்களை வெளியேற்றும்; அல்லது அங்குள்ள பள்ளங்களில் தங்கும். அதற்கு ஏற்ப பரிசுப் பொருட்கள் தரப்படும். ஆனால் தவறாக எறிந்து அது மீண்டும் எறிந்தவரை நோக்கி வருவதற்கு ஒத்தது இந்த நிகழ்வு. இதை தவிர்ப்பதற்காக நாசாவை சேர்ந்த ராகில் மக்காடியா குழுவினர் எரிகல்லில் மோதுவதற்கு பாதுகாப்பான இடங்களை அடையாளம் காணும் வரைபடங்களை தயாரித்துள்ளனர். அதற்கு எரிகல்லின் வடிவம், மேற்பரப்பு அம்சங்கள், சுழற்சி, பொருள்திணிவு ஆகியவை குறித்த விரிவான புரிதல் தேவை. கால அவகாசம் இருந்தால் விண்கலத்தை செலுத்தி தெளிவான பிம்பங்களும் தரவுகளும் பெறலாம். ஆனால் எரிகல் வருவது மிகவும் தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டால் தரையிலிருந்து தொலைநோக்கி மூலம் கிடைக்கும் குறைந்த தெளிவு வரைபடங்கள் உண்டாக்கலாம். ஐரோப்பிய விண்வெளி முகமையின் ஹீரா திட்டம் 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டார்ட் மோதிய இடத்திற்கு செல்லும். அது பல முக்கிய தரவுகளை தரும். அதன் மூலம் இந்த முறையை இன்னும் சீராக்கலாம்.
