லக்னோ:
கொரோனா 2-ஆவது அலையின் போது, மருத்துவமனைகளில் இடமில்லாமலும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்காமலும் உத்தரப்பிரதேசத்தில் மக் கள் கொத்துக் கொத்தாக செத்துமடிந்தனர். உரிய சிகிச்சை கிடைக் காமல் இறந்து போனவர்களை எரிப்பதற்கோ, புதைப்பதற்கோ இடமில்லாமலும், பிணங்களைக் கங்கையாற்றில் தூக்கிவீசிய சம்பவங்களும் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறின.
கொரோனா தடுப்பு நடவடிக் கைகளை எடுப்பதில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தின் செயல்பாடுகள் படுமோசம் என்று பாஜகவைச் சேர்ந்த அன்றைய ஒன்றியஅமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் துவங்கி மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ-க்களே பலர்புகார் கடிதங்களை எழுதினர். மூன்று மணி நேரம் காத்திருந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை ஆக்ரா மருத்துவமனையில் சேர்க்க முடியவில்லை என்று ஜஸ்ரானா தொகுதி பாஜக எம்எல்ஏ ராம்கோபால் லோதி குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார். முதல்வர்ஆதித்யநாத்தின் தவறான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் உத்தரப்பிரதேசத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 10 பேர் உயிர் இழந்திருப்பதாக அந்த மாநிலத்தைச் சேர்ந்தபாஜக செயற்குழு உறுப்பினர் ராம் இக்பால் சிங் வாக்குமுலம் அளித்தார். “கொரோனா முதல்அலையில் இருந்து ஆதித்யநாத்அரசு எந்த ஒரு பாடமும் கற்கவில்லை” என்று அவர் விமர்சித்திருந்தார்.
இவ்வாறு சொந்தக் கட்சியினரிடமே கண்டனத்திற்கு ஆளான உ.பி. முதல்வர் ஆதித்யநாத், அண்மையில் ‘தி இந்து’ ஆங்கிலநாளிதழுக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், சமாஜ்வாதி மற்றும்காங்கிரசோடு தொடர்புடையவர் கள்தான், கொரோனாவில் இறந்ததங்களின் உறவினர்களின் உடல்களை கங்கை ஆற்றில் வீசினார் கள் என்று கூறியுள்ளார். பலராம்பூர் மாவட்டத்தில் சமாஜ்வாதி,காங்கிரசோடு தொடர்புடையவர் கள் தங்கள் உறவினரின் உடலை பாலத்தில் இருந்து கங்கையில் வீசியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இறந்தவரின் உடலை புதைப்பது, எரிப்பது அல்லது நீர்நிலைகளில் விடுவது இந்து மத சம்பிரதாயம் என்றாலும், தூய்மை கங்கை திட்டத்தை தொடங்கியது முதல் கங்கையில் உடல் களை மிதக்க விடக்கூடாது என்றுஉ.பி. அரசு தீவிரமாக உள்ளதாகவும் அவர் கூறிக்கொண்டுள்ளார்.