லக்னோ:
குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின்போது சுதந்திரம் (ஆஸாதி) என முழக்கமிடுவோர் மீது தேசத் துரோக வழக்கு பாயும் என்று உத்தரப்பிரதேச மாநில பாஜக முதல் வரும், சாமியாருமான ஆதித்யநாத் மிரட்டல் விடுத்துள்ளார்.
பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தம், மக்களை மத ரீதியாக பிரிக்க முயல்கிறது;குறிப்பாக, இஸ்லாமியர் களை தனிமைப்படுத்தி ஒடுக்குவதாக இருக்கிறது என்று குற்றம்சாட்டி, நாடு முழு வதும் அரசியல் கட்சிகள், மாணவர்கள், இஸ்லாமிய அமைப்புகள் என பலர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தப் போராட்டங்களின்போது, “என்.ஆர்.சிமற்றும் குடியுரிமை திருத்தச்சட்டத்தில் இருந்து தங்களுக்கு சுதந்திரம் (ஆஸாதி)வேண்டும்” என்று முழக்கங்க
ளையும் அவர்கள் எழுப்பி வருகின்றனர்.இந்நிலையிலேயே, “குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவது வெட்கக்கேடான விஷயம். ஆண்கள் வீட்டில் இருக்க, பெண்கள் வீதிக்கு வந்து ‘எதற்காக போராடுகிறோம்’ என்று தெரியாமலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஆஸாதி(சுதந்திரம்) என முழக்கமிட் டால் தேசத் துரோக வழக்கு பாயும்” என்று கான்பூரில் நடைபெற்ற சிஏஏ ஆதரவுப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஆதித்யநாத் மிரட்டியுள்ளார்.