india

img

‘அப்பா ஜான்’ என்பவர்களே ரேசனை அபகரித்தார்கள்.... முஸ்லிம்களை இழிவுபடுத்திப் பேசிய உ.பி. முதல்வர் மீது வழக்கு.....

முசாபர் நகர்:
இஸ்லாமியர்களை இழிவுபடுத் தும் வகையில் பேசியதாக, உ.பி. மாநில பாஜக முதல்வர் ஆதித்யநாத் மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத், இரண்டு நாட்களுக்கு முன்பு குஷிநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது,‘‘உத்தரப்பிரதேசத்தில் 2017-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் ரேசன் விநியோகம் மக்களுக்கு பயனுள்ளதாக மாறியது. அதற்குமுன் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேசன்பொருட்களை ‘அப்பா ஜான்’ என்று கூறுபவர்கள்தான் சாப்பிட்டார்கள்’’ என்றார்.‘அப்பா ஜான்’ என்பது, இஸ்லாமியர்கள் தங்களின் தந்தையை அழைக்கப்பயன்படுத்தும் வார்த்தை என்றநிலையில், ஆதித்யநாத்தின் பேச்சுசர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ்,சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு எதிர்க் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எனினும் ஆதித்யநாத் வருத்தமோ, மன் னிப்போ கேட்கவில்லை.இந்நிலையில், இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கும் ஆதித்யநாத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்ட தலைமை நடுவர் நீதிமன்றத்தில், தமன்னா ஹாஸ்மி எனும் சமூக செயற்பாட்டாளர் வழக்குதொடர்ந்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.