பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பணி நீக்கம் செய்யும் மசோதாவுக்கு சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
30 நாட்கள் காவலில் இருந்தால் பிரதமர், முதல்வர், அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்கும் மசோதாக்கள் பா.ஜ.க.வின் கொலைகார நவ பாசிச குணத்தை வெளிப்படுத்துகிறது. ஜனநாயக விரோத இந்த மசோதாவை சிபிஎம் அங்குலம் அங்குலமாக எதிர்க்கும்.
உயர்பதவிகளில் கிரிமினல் குற்றங்களை தடுப்பது எனும் பெயரால் கொண்டு வரப்படும் இந்த வரைவு சட்டம், ஆர்.எஸ்.எஸ்.ஆல் வழிநடத்தப்படும் இந்த அரசாங்கம் கடந்த காலத்தில் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை சிதைக்க முயன்றது எனும் அனுபவம் இதன் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. SIR தாக்குதலுடன் இதுவும் சேர்ந்துள்ளது. அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இதனை முறியடிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.