மதுபான கொள்கை வழக்கிலிருந்து தில்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஸ் சிசோசியா உள்ளிட்ட அனைவரையும் சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
வழக்கின் பின்னணி:
2021ஆம் ஆண்டு தில்லி அரசு வருவாய் உயர்த்தவும், மதுபான வணிகத்தை சீரமைக்கவும் புதிய மதுபான கொள்கையை கொண்டு வந்தது. பின்னர், அமல்படுத்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
மணீஸ் சிசோடியா 2023 பிப்ரவரி 26ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார். பின்னர் 2023 மார்ச் 9ஆம் தேதி அமலாக்க இயக்குநரகமும் கைது செய்தது.
சிபிஐ பதிவு செய்த FIR-ல், 2021-22 மதுபான கொள்கை தொடர்பாக உரிய அதிகாரத்தின் ஒப்புதல் இன்றி உரிமம் பெற்றவர்களுக்கு அநியாய ஆதாயம் அளிக்கும் நோக்கில் பரிந்துரைகள் செய்து முடிவுகள் எடுத்ததாக சிசோடியா உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
மணீஸ் சிசோடியா 2023 பிப்ரவரி 26ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார். பின்னர் 2023 மார்ச் 9ஆம் தேதி அமலாக்க இயக்குநரகமும் கைது செய்தது. அமலாக்க இயக்குநரகக் காவலில் இருந்தபோது, 2024 ஜூன் 26ஆம் தேதி சிபிஐ அரவிந்த் கெஜ்ரிவாலை அதிகாரப்பூர்வமாக கைது செய்தது.
மணீஸ் சிசோடியா சுமார் 530 நாட்கள் சிறையில் இருந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு கட்டங்களாக மொத்தம் சுமார் 156 நாட்கள் சிறையில் இருந்தார். 2024 செப்டம்பர் 13ஆம் தேதி உச்சநீதிமன்றம் சிபிஐ வழக்கில் ஜாமீன் வழங்கியதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
தீர்ப்பு விவரங்கள்:
தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் தில்லி முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஸ் சிசோடியா உட்பட 23 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது
விசாரணையில் ஏற்பட்ட தவறுகள் குறித்து சிபிஐ மீது நீதிமன்றம் கடுமையாக சாடியது. ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் பல குறைகள் இருப்பதாகவும், அவற்றுக்கு எந்த சாட்சியங்களின் ஆதாரமும் இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
மணீஸ் சிசோடியா மீது குற்றச்சாட்டு நிலைநாட்டுவதற்கான ஆரம்ப நிலை ஆதாரங்களையே சிபிஐ நிறுவத் தவறியுள்ளது எனவும், கெஜ்ரிவால் மீது உறுதியான ஆதாரமின்றி வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிபதி கூறினார்.
குற்றப்பத்திரிகையில் சாட்சியங்களுடன் பொருந்தாத தகவல்கள் உள்ளதாகவும், வழக்கின் மையக் கருத்தையே பாதிக்கும் உள்மாறுபாடுகள் உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
சிபிஐ விசாரணை அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
