election2021

img

கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்.... மூன்றாவது முறையாக களம் இறங்கினார்....

சென்னை:
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மார்ச் 15 திங்களன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி  நடைபெறுகிறது. அனைத்துக்கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனு தாக்கல் செய்யத் துவங்கியுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில்  சென்னை கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும்  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மார்ச் 15 திங்களன்று  தனது வேட்பு மனுவைதாக்கல் செய்தார். அயனாவரம் பேருந்து பணிமனை அருகில் உள்ள 6-வது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக வாக்குகள் கோரிய அவருக்கு மேளதாளம், தாரைதப்பட்டை முழங்க வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.இதன்பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின் , உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். மாநிலம் முழுவதும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.